மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளை ரயில்வே இப்போது அகற்றப் போகிறது என்ற பரவி வரும் செய்திகளை Indian railways மறுத்துள்ளது. மூன்று டயர் கோச்சுகளை கொண்டுவருவதன் நோக்கம் பயணிகளின் பயண கட்டனத்தை குறைப்பதாகும் என ரயில்வே தெரிவித்துள்ளது. மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில், ரயில்வே வாரியத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வி.கே.யாதவ், நாங்கள் நிச்சயமாக ஸ்லீப்பர் கிளாஸ் வகுப்பை முற்றிலுமாக நீக்கும் நோக்கம் எதுவுமில்லை, ஆனால் வரும் காலத்தில் சில ஸ்லீப்பர் கோச்சுகளுக்கு பதிலாக புதி வடிவமைப்பிலான, மிக குறைந்த கட்டணம் கொண்ட ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என தெளிவு படுத்தினார்.
ரயில்வேயின் முக்கிய திட்டம் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதாகும். புது தில்லி-மும்பை மற்றும் புது தில்லி-கொல்கத்தா வழித்தடங்களில் ரயில் வேகம் 130 கி.மீ. இருக்கும் என்றும், அதே நேரத்தில் 160 கி.மீ வேகத்தை அடைய பாதையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்தார். வேகம் அதிகரிக்கும் போது, ஸ்லீப்பர் வகுப்பில் பயணிகளுக்கு ஏற்படும். அதை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்றார்.
புதிய ஏசி -3 டயர் கோச்சுகளை உருவாக்க ரயில்வே முடிவு செய்துள்ளது, இது அடுத்த ஆண்டுக்குள் வரும். ஏசி பயண கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார். புதிய ஏசி கோச்சுகளின் பயண கட்டணம், ஸ்லீப்பர் க்ளாஸ் மற்றும் ஏசி கட்டணத்திற்கு இடைப்பட்ட அளவிலான கட்டணமாக இருக்கும் என்றார்
ரயில்வே விரைவில் 72 பெர்த்துகளுக்கு பதிலாக 83 பெர்த்துகள் உள்ள ஏசி பெட்டிகளைக் கொண்டு வர உள்ளது.
இதுவரை 3 டயர் ஏசி கோச்சுகளில் 72 பெர்த்கள் அல்லது இருக்கைகள் உள்ளன. ரயில்வே கோச்சுகள் புதிய வடிவமைக்கபப்ட்டு, அதன் மூலம், ரயில்களில் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு 100 பெட்டிகள் தயாராக இருக்கும், அடுத்த ஆண்டு 83 இருக்கைகள் கொண்ட பெட்டிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் ரயில்வே வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பெட்டிகள் ஒரு மணி நேரத்திற்கு 130 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் செல்லும் ரயில்களில் மட்டுமே பயன்படுத்தப்படும்.
புதிய வடிவமைப்பின் கீழ் ரயில்வே வடிவமைத்துள்ள இந்த ஏசி பெட்டிகள், ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு பதிலாக மாற்றப்படும். வரவிருக்கும் காலங்களில், ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு பதிலாக ஏசி பெட்டிகளை மாற்ற ரயில்வே தயாராகி வருகிறது.