Budhan Peyarchi Palangal: ஜனவரி 4ஆம் தேதி நடக்கவுள்ள புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Budhan Peyarchi Palangal: பேச்சாற்றல், தர்க்கம், நுண்ணறிவு, தகவல் தொடர்பு, கணிதம், புத்திசாலித்தனம் மற்றும் நட்பு ஆகியவற்றிற்கும் காரணி கிரகமாக புதன் இருக்கிறார். புதன் கிரகங்களின் இளவரசன் என்றும் அழைக்கப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் புதனின் நிலை நன்றாக இருந்தால் அதிக சுப பலன்கள் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 4ஆம் தேதி புதன் பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகிறார். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அமோகமான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு வெற்றிகள் குவியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிட கணக்கீடுகளின் படி, 2025 ஆம் ஆண்டின் ஆரம்பம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால், புத்தாண்டு புதன்கிழமையில் தொடங்குகிறது. 'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என கூறுவார்கள். ஆகையால் புதன்கிழமை துவக்கம் மிக நல்லதாக கருதப்படுகிறது.
சுப கிரகமாக கருதப்படும் புதன் மற்றொரு வழியிலும் புத்தாண்டில் நன்மை செய்கிறார். ஆண்டின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 4ஆம் தேதி புதன் பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகிறார். ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் புதனின் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அமோகமான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு வெற்றிகள் குவியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவுள்ள புதன் பெயர்ச்சி அதிகமான அதிர்ஷ்டத்தை அளிக்கும். புதன் சஞ்சாரம் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். புத்தாண்டில் வருமானம் பெருகும். புதிய வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கல்வியுடன் தொடர்புடையவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும்.
மிதுனம்: புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. புதன் பெயர்ச்சி காலத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான சூநிலைகள் இருக்கும். குழந்தைகளால் நன்மைகள் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரின் ஆதரவு இருக்கும். லாபம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை இருக்கும்.
சிம்மம்: புத்தாண்டின் தொடக்கத்தில் புதன் பெயர்ச்சி ஆவது சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஆன்மீக காரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். முதலீடு நல்ல நிதி ஆதாயத்தைத் தரும். லாபத்திற்கான பல வாய்ப்புகளும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அதிகமான நன்மைகளை அளிக்கும். இந்த புதன் சஞ்சாரத்தால், வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்த திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சகோதரரின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் கிடைக்கும். கட்டிடம், வாகனம் போன்றவற்றால் இன்பம் பெறலாம். அலுவலக பணிகளில் உள்ளவர்கள் பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.
ஜோதிடத்தில் புதன் கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சுப கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. புதனின் மாற்றங்கள் பெரும்பாலும், அனைத்து ராசிகளுக்கும் நன்மையையே அளிக்கின்றன.
பேச்சாற்றல், தர்க்கம், நுண்ணறிவு, தகவல் தொடர்பு, கணிதம், புத்திசாலித்தனம் மற்றும் நட்பு ஆகியவற்றிற்கும் காரணி கிரகமாக புதன் இருக்கிறார். புதன் கிரகங்களின் இளவரசன் என்றும் அழைக்கப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் புதனின் நிலை நன்றாக இருந்தால் அதிக சுப பலன்கள் கிடைக்கும். புதனின் அருள் பெற்றவர்கள் புத்திசாலிகளாக இருப்பதோடு வாழ்வில் பல வித வெற்றிகளையும் பெறுகிறார்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.