Packaged Drinking Water: புத்தாண்டில் மாறப்போகும் முக்கிய விதிகள்..!!!

பாட்டில் குடிநீர் (Packaged Drinking Water) தொடர்பான விதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து, ஜனவரி 1 முதல், அதன் சுவையும் மாறப்போகிறது. இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (Food Safety Standards Authority of India)  பாட்டில் குடிநீருக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

பாட்டில் குடிநீர் Packaged Drinking Water தொடர்பான விதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து, ஜனவரி 1 முதல், அதன் சுவையும் மாறப்போகிறது. இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (Food Safety Standards Authority of India)  பாட்டில் குடிநீருக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

1 /5

பாட்டில் குடிநீரை தாயரிக்கும் நிறுவனங்கள் தற்போது தாங்கள் தயாரிக்கும்  ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில்,  20 மில்லிகிராம் கால்சியம் மற்றும் 10 மில்லிகிராம் மெக்னீசியம் கட்டாயம் சேர்க்க வேண்டும் என FSSAI இன் புதிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

2 /5

தாதுக்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது, எனவே பாட்டில் குடிநீரில் சில தாதுக்களை கலப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) FSSAI க்கு அறிவுறுத்தியது. தண்ணீரை வடிகட்டுவதற்கான செயல்முறையினால், நீக்கப்பட்ட தாதுக்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். அப்போது தான் அவை குடிக்க பாதுகாப்பானவை என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியது.

3 /5

தேசிய பசுமை தீர்ப்பாயம், 2019, மே 29 அன்று முதலில் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. இதை செயல்படுத்த நிறுவனங்கள் இரண்டு முறை இவற்றிற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டன. ஆனால் இப்போது இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் 2020 டிசம்பர் 31 காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

4 /5

தற்போது, ​​Kinley, Bisleri, Bailey, Aquafina, Himalayan, Rail Neer, Oxyrich, Vedica மற்றும் Tata Water Plus ஆகிய நிறுவனங்கள் சந்தையில் பாட்டில் குடிநீரை விற்பனை செய்கின்றன. புதிய விதிப்படி, தண்ணீர் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

5 /5

இந்த நிறுவனங்கள் அனைத்தும் கால்சியம் மற்றும் மெக்னீசியத்துடன் தங்கள் தண்ணீர் பாட்டில்களை ஒரு குறிப்பிட்ட தொகையில் விற்பனை செய்யும். இந்தியாவில் பாட்டில் குடிநீரின் மொத்த வணிகம் ரூ .3000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் 500 மில்லி, 250 மில்லி, 1 லிட்டர், 15-20 லிட்டர் பாட்டில்களை விற்பனை செய்கின்றன. இதில் சந்தையில் 42% சதவிகித விற்பனை 1 லிட்டர் பாட்டில்கள் விற்பனையாகும்.