2023ஆம் ஆண்டு முடியப்போகிறது. இந்த ஆண்டில் பல தமிழ் செலிபிரிட்டிக்கள் பெற்றோர்களாக மாறியுள்ளனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
புது வருடம் விரைவில் பிறக்க உள்ளது. இந்த ஆண்டில் பல செலிபிரிட்டிக்கள் திருமணம் செய்து கொண்டனர். சிலர், பெற்றோர்களாகவும் மாறியுள்ளனர்.
ஆரவ் முதல் அட்லீ வரை, பல திரையுலக பிரபலங்கள் இந்த வருடம் பெற்றோர்களாகியுள்ளனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
ஆரவ், 2020ஆம் ஆண்டு நடிகை ராஹைஐ திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் வில்லன் நடிகராக வலம் வருபவர், ஹரிஷ் உத்தமன். இவர், சின்னு குருவில்லா என்ற நடிகையை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
நடிகர் அஷ்வின், 2016ஆம் ஆண்டில் சோனாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2019ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
தமிழில் வளர்ந்து வரும் வில்லன் நடிகராக இருப்பவர், ஜான் கொக்கன். இவருக்கும் துணை நடிகை பூஜாவிற்கும் 2019ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு இந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
ஜவான் படம் மூலம் இந்திய அளவில் அறியப்பட்ட இயக்குநராகமறியவர் விசித்ரா. இவர், நடிகை பிரியாவை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இந்த ஆண்டின் ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது.