Latest News Netflix Scam : இந்தியாவில், பலர் நெட்ஃப்ளிக்ஸ் உபயோகிக்கின்றனர். இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஒரு ஸ்கேம் உலா வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து இங்கு பார்ப்போம்.
Latest News Netflix Scam : பல திரைப்படங்களையும் வெப் தொடர்களையும் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் தளம், நெட்ஃப்ளிக்ஸ். இந்த தளத்தை பயன்படுத்துபவர்களை குறி வைத்து ஒரு ஏமாற்று கும்பல் தற்போது வலைவீச தொடங்கியிருக்கிறது. இது குறித்த தகவலையும், இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.
நெட்ஃப்ளிக்ஸ் பயணாளர்களை குறி வைத்து தற்போது ஒரு ஸ்கேம் உலா வர தொடங்கியிருக்கிறது. இந்த ஸ்கேமை 23 நாடுகளுக்கும் மேல் உள்ளவர்கள் சந்தித்திருக்கின்றனர். இதனால், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது பயணாளர்களுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸில் கணக்கு வைத்திருப்பவர்களிடம், அவசரமாக கிரெடிட் கார்ட் விவரங்களை கேட்டு, ஒரு மெயில் அனுப்பப்படுகிறது. இதைப்பற்றி தெரியாத பலர், தங்களின் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்து விட வாய்ப்புள்ளது.
இவர்கள், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அனுப்புவது போலவே அந்த மெயிலை அனுப்புகின்றனர். அதில், “கடைசியாக நீங்கள் செலுத்திய பணம் process ஆகவில்லை, மீண்டும் பணத்தை செலுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதை கண்டுபிடிப்பதற்கு, அந்த மெயிலில் ஏதேனும் எழுத்துப்பிழை அல்லது வார்த்தை பிழைகள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
நெட்ஃப்ளிக்ஸ் பயணாளர்கள் இது போன்ற லிங்க் வந்தால் அதை தொடுவதை தவிர்க்கவும்.
அப்படி உங்களுக்கு அனுப்பப்படும் லிங்குகள், உங்களை dark web அல்லது அதை விட மோசமான தளங்களுக்கு அழைத்து செல்லலாம்.
இப்படிப்பட்ட மெசஜ் அல்லது மெயில் வந்தவர்கள் உடனடியாக இது குறித்து புகார் தெரிவிக்குமாறு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.