Photos Of Amala Paul With Her Son Ilai : பிரபல நடிகை அமலா பால், தனது மகனுடன் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Photos Of Amala Paul With Her Son Ilai : தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் அமலா பால். இவருக்கு கடந்த ஆண்டு, குழந்தை பிறந்தது. இந்த நிலையில், இலை-க்கு வேட்டி சட்டை கட்டிவிட்டு அவருடன் போட்டோஷூட் செய்துள்ளார், அமலா பால். இந்த போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர், அமலா பால். இவர் தமிழில் முதன்முதலில் நடித்து அறிமுகான படம், சிந்து சமவெளி. இந்த படத்திற்கு பிறகு அவரை பிரபலப்படுத்திய படம், மைனா.
அமலா பாலுக்கு முதலில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் திருமணம் நடந்தது. இது, சில ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து சில ஆண்டுகள் அவர் சிங்கிளாக இருந்தார்.
அமலா பால், 2023ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் திருமணம் ஆகும்.
கீர்த்திக்கும், ஜகத் தேசாய்க்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இலை என பெயர் வைத்தனர்.
பொங்கல் பண்டிகை வரவிருக்கும் நிலையில், தனது மகனுக்கு க்யூட்டாக வேட்டி சட்டை அணிவித்து சில போட்டோக்களை அவர் பதிவிட்டிருக்கிறார்.
இதில் அவர் பார்ப்பதற்கு க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.