Astro Predictions 2023 February 03: இன்றையை கிரக நிலைகள் மற்றும் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? 2023 பிப்ரவரி 3ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கான தின பலனைஅறிந்து கொள்ளலாம்.
மேஷம்: உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கால்நடை சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். பொது காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தகவல் தொடர்பு துறையில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்: எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். கவலை விலகும் நாள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் தடைபட்ட தனவரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.
கடகம்: பயனற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சகோதரர் வகையில் ஒற்றுமையும், புரிதலும் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் பொறுப்புகளும், பணிகளும் அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம்: தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக ரீதியான பணிகளில் ஆர்வமின்மை ஏற்பட்டு மறையும். நன்மை நிறைந்த நாள். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
கன்னி: சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். தடைபட்ட பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
துலாம்: தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனை மற்றும் வாகனம் சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இனம்புரியாத கற்பனைகளின் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். அன்பு நிறைந்த நாள்.
விருச்சிகம்: சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். விளையாட்டுத் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கல் நிறைந்த நாள்.
தனுசு: செயல்பாடுகளில் மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், ஒருவிதமான மந்தத்தன்மையும் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். ஆதாயம் நிறைந்த நாள்.
மகரம்: பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற்று பாராட்டுகளை பெறுவீர்கள். நண்பர்களிடத்தில் உங்கள் மீதான முக்கியத்துவம் அதிகரிக்கும். செயல்பாடு மற்றும் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.
கும்பம்: எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். தாய்மாமனிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மனதிற்குப் பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.
மீனம்: புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சகோதரர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.