நினைத்ததை நிறைவேற்றும் முருகன்! கந்தனை சரணடைந்தால் போராட்ட வாழ்க்கையும் பொற்காலம் ஆகும்!

Lord Murugan Worship On Shashti : முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும் முருகனை வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். முருகனின் அருளால் அனைத்து நலன்களும் வந்து சேரும்...

சிவகுமரன் முருகனை வழிபட்டால், மன அமைதி, நிம்மதி என உண்மையான செல்வங்களைப் பெற்று செல்வந்தனாக வாழலாம். முருகனின் அருளைப் பெற்று வாழ்வில் முன்னேறுவோம்...

1 /8

முருகனை எப்படி வழிபட வேண்டும்? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. எப்படி வழிபட்டாலும், பக்தி என்ற மலர் கொண்டு அனுதினமும் அர்ச்சித்தால் முருகன் அருள் பொன் மழையாய் பொழிந்து வாழ்க்கையை பொற்காலம் என மாற்றும்

2 /8

ஓம் சரவணபவ என்ற மந்திரம் ஒன்றே வினையறுக்கும். "கந்த சஷ்டி கவசம்" கவசமாய் இருந்து தீவினைகளை அறுத்து நன்மைகளைக் கொடுக்கும்

3 /8

திருப்புகழை தினந்தோறும் ஓதித் துதித்தால், மனச்சாந்தியும், முருகனின் அருளும் கிடைக்கும்.

4 /8

மாதாந்திர சஷ்டி விரதம் இருக்க வேண்டும், தீபாவளிக்கு பிறகு வரும் ஐப்பசி சஷ்டி மிகவும் விசேஷமானது சக்திவேல் கொண்டு அசுரனை அழித்த முருகனுக்கு சஷ்டி விரதம் மிகவும் பிடித்தமானது

5 /8

முருகனின் வேல் சக்தியின் புனித சின்னமாகும். வீட்டில் வேல் வைத்து பூஜை செய்வது சிறந்தது. முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வேல் வழிபாட்டின் போது முருகனின் ஸ்லோகங்கள் மற்றும் கந்த சஷ்டி கவசம் சொல்லலாம்

6 /8

செவ்வாய் கிழமைகளில் முருகனை வழிபடுவது மிகவும் உகந்தது. செவ்வாய் கிரகத்திற்குக் அதிபதியான முருகனை அவருக்கு உரிய செவ்வாய்க்கிழமையன்று  வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். வீட்டில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தீய சக்திகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்

7 /8

முருக வழிபாட்டில் விரதங்களைக் கடைப்பிடிப்பது என்பது மரபு, விரதங்கள் இருப்பதால் மனதும் உடலும் தூய்மையாகும்

8 /8

புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லும் போது முருகன் கோவில்களில் மாலையில் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் செய்வது மிகவும் பலன் தரும்.