அச்சச்சோ.. ‘அந்த’ விஷயத்துல பிரச்சனையா!! ‘இந்த’ விஷயத்துல கவனமா இருங்க

Low Sperm Count:இன்றைய காலக்கட்டத்தில், தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவின் காரணமாக, பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இது அவர்களின் மலட்டுத்தன்மையை அதிகரிக்கின்றது. 

 

சில ஆண்களால் விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது.  ஆண்களின் இந்த நிலை அஸோஸ்பெர்மியா எனப்படும். இந்த பிரச்சனை சுமார் ஒரு சதவீத ஆண்களுக்கு ஏற்படுகிறது. இதை அடையாளம் காண எந்த அறிகுறியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

1 /6

இந்த பிரச்சனையால் கஷ்டப்படுபவர்களால் தந்தை ஆகும் அதிர்ஷ்டத்தை பெற முடிவதில்லை. இந்த பிரச்சனை உள்ளவர்களால், விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடிவதில்லை, அல்லது சில பிரச்சனைகளால், உடலில் இருந்து விந்தணுக்கள் வெளியேற முடிவதில்லை. இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளிப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.   

2 /6

அஸோஸ்பெர்மியாவின் பிரச்சனை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதுடன் மற்ற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆகையால், ஒருவருக்கு அசோஸ்பெர்மியா இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். பல ஆண்கள் வெட்கப்பட்டு இந்த பிரச்சனையைப் பற்றி யாரிடமும் சொல்ல மாட்டார்கள். எனினும், இந்த பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக இதற்கான நிபுணரை அணுக வேண்டியது மிக அவசியமாகும். 

3 /6

அனைத்து விஷயங்களுக்கும் டென்ஷன் ஆகும் நபரா நீங்கள்? அத்தகைய ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் மன அழுத்தம் காரணமாக, ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும். கவலை மற்றும் மன அழுத்தம் காரணமாக, விந்தணுவின் தரம் குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

4 /6

உடற்பயிற்சி செய்யாதவர்கள் உடல் பருமன் பிரச்சனையால் சிரமப்படுவார்கள். உடல் பருமன் காரணமாக, விந்தணுவின் இயக்கம் குறைகிறது. இது உங்கள் பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கலாம். அதனால் தினமும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

5 /6

இப்போதெல்லாம் பல இளைஞர்கள் இரவு வெகுநேரம் வரை தூங்குவதில்லை. இதனால், மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் பிரச்னையால் அவர்கள் சிரமப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர்களுக்கு விந்தணு எண்ணிக்கையில் பிரச்சனை ஏற்படலாம். 

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.