கோடி கோடியாக செல்வம் குவியும்.. குருவால் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

Guru Vakri 2023 in Tamil: வேத ஜோதிடத்தில், வியாழன் கிரகத்திற்கு குருவின் பெயர்ச்சொல் வழங்கப்படுகிறது. அதன்படி குருவின் பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி மற்றும் வக்ர நிவர்த்தி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வியாழன் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார், மற்றும் டிசம்பர் வரை இந்த நிலையில் தான் இருக்கும்.

குரு வக்ர பெயர்ச்சி 2023: குரு கிரகம் அதாவது தேவகுரு வியாழன் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு 7:41 மணி முதல் பின்னோக்கி நகரத் தொடங்கிவிட்டது, இப்போது டிசம்பர் 31 ஆம் தேதி காலை 8:10 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைவார். வியாழன் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து கிரகங்களிலும் வித்தியாசமாக இருக்கும். குருவின் வக்ர பெயர்ச்சி தாக்கம் எந்தெந்த ராசியில் என்ன பலனை ஏற்படுத்தம் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /14

புத்தாண்டு வரை குரு வக்ர பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின் படி, செப்டம்பர் 04 ஆம் தேதி குரு வக்ர பெயர்ச்சி அடைந்தார். வியாழன் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும். இந்த காலகட்டத்தில் பொருளாதார மற்றும் வணிகத் துறையில் பெரும் பலன்களைப் பெறும் ராசிகள் உள்ளன. அந்த ராசிகளைப் பற்றி காண்போம்.

2 /14

மேஷ ராசி - இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும், நேரம் நன்றாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நேரம் நன்றாகவே இருக்கும். இதற்கிடையில் நீங்கள் உற்சாகமாக உணர்வீர்கள். மாணவர்களுக்கும் நல்ல நேரம். அவர்களின் அறிவு பெருகும்.

3 /14

ரிஷப ராசி - ரிஷபம் ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக அவர்களின் ஆரோக்கிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், அலட்சியமாக இருக்க வேண்டாம். வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வயிற்றுடன், கல்லீரலையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இது உங்களுக்கு போராட்ட காலம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.

4 /14

மிதுன ராசி - இந்த ராசிக்காரர்கள் அலுவலகம் சார்பாக பயணம் செய்ய நேரிடலாம், எனவே உங்கள் பயணப் பையை தயாராக வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு மூத்த சகோதரர் இருந்தால், அவருக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள், அதைக் கேட்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

5 /14

கடக ராசி - கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள், பணியிடத்தில் முன்னேற்றம் சாத்தியமாகும். நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, தொடர்ந்து அங்கு பணிபுரிந்தால் இடமாற்றமும் நிகழலாம். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவுகள் அதிகமாக இருக்கும். 

6 /14

சிம்ம ராசி - குருவின் வக்ர பெயர்ச்சி காரணத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு பலம் அதிகரிக்கும், இதனுடன், பொறுமையும் அதிகரிக்கும். பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். போராடுபவர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும், நல்ல செய்தி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு இருப்பதால் தயாராக இருங்கள். குழந்தை மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

7 /14

கன்னி ராசி - கன்னி ராசிக்காரர்கள் நிதி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு திடீர் பலன்கள் கிடைக்கும். சொத்து அல்லது இழந்த பணத்தை பெறலாம். உங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

8 /14

துலாம் ராசி - இந்த ராசிக்காரர்களின் ஓட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரிகளின் வியாபாரம் அதிகரிக்கும். சில நல்லவர்களுடனான உங்கள் தொடர்பு அதிகரிக்கும், சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை மாற்ற வேண்டியிருக்கும். பிள்ளைகளுக்கு நேரம் நன்றாக இருக்கும். காரியங்கள் முடியும் ஆனால் அவற்றுக்கு நேரம் எடுக்கும்.

9 /14

விருச்சிக ராசி - விருச்சிக ராசிக்காரர்கள் பணியிடத்தில் சவால்களை சந்திக்க நேரிடலாம், ஆனால் பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். உங்கள் பொறுப்புகள் அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு எதிரான சதிகளும் இருக்கும், இதிலிருந்து விலகி இருக்கவும். சட்ட விஷயங்களில் கவனம் தேவை. குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் இருக்கலாம். மேலும் உங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

10 /14

தனுசு ராசி - இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தலாம். மாணவர்கள் தாங்கள் பாடத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். போட்டிக்குத் தயாராகுபவர்கள் சோம்பேறிகளாக இருக்கவே கூடாது. உங்கள் சகோதர சகோதரிகளின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு உள்ளது. இந்த ராசியை சேர்ந்த கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்பத்தை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

11 /14

மகர ராசி - மகர ராசிக்காரர்கள் துறையில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் டென்ஷனாக இருந்த விஷயங்கள், இப்போது தீர்வு கிடைத்து சற்று நிம்மதியாக இருப்பீர்கள். உங்கள் வருமானத்துடன், செலவுகளும் அதிகரிக்கும், நீங்கள் சொத்தில் முதலீடு செய்ய நினைத்தால், இதுவே சரியான நேரம்.

12 /14

கும்ப ராசி - மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் இந்த ராசிக்காரர்கள் சோம்பேறித்தனத்திலிருந்து விலகி இருக்க வேண்டும், அவர்கள் தங்கள் நெட்வொர்க்கை கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும், இதற்கிடையில் நீங்கள் குறுகிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இளைய சகோதர சகோதரிகளின் கல்விக்கு ஒத்துழைக்கவும், அவர்களுக்கு நிதி அல்லது வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், நிச்சயமாக அவர்களுக்கு உதவுங்கள்.

13 /14

மீன ராசி - மீன ராசிக்காரர்கள் பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும், ஏனென்றால் பேச்சால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலைக்காகவோ அல்லது வீட்டிற்கோ அதிகக் கடன் வாங்காதீர்கள், ஏனெனில் அதை திரும்பத் தர முடியாமல் கஷ்டப்படலாம். உங்கள் ஆரோகத்தியத்தை மேம்படுத்த வேண்டுமானால், உங்கள் வாழ்க்கை முறையை உடனடியாக மாற்றவும்.

14 /14

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.