சனியால் ஜெயிக்கப்போகும் ராசிகள்: வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். பணவரவை அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியின்போது சனிபகவான் கும்பராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். 30 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இதனால் நன்மை பயக்கப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
மேஷம்: கும்ப ராசியில் வக்ரத்துடன் இருந்த சனிபகவான், நவம்பர் 4ஆம் தேதி, வக்ர நிவர்த்தி ஆகிறார் என்பது மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் செயலாகும். சனி பகவான் மேஷ ராசிக்கு பத்தாம் வீட்டில் இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். பணியிடத்தில் இன்கிரிமென்ட் கொட்டும். குபேர யோகத்தால் வீடு, மனைகள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் சிறப்பான ஆசிகள் கிடைக்கும். பொருளாதார அம்சம் வலுவாக இருக்கும். செலவுகள் குறையும். பரிவர்த்தனைகளுக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். முதலீடு செய்வதால் லாபம் உண்டாகும். புதிய வேலைகளைத் தொடங்கலாம். இந்த நேரத்தை வேலை மற்றும் வணிகத்திற்கான வரம் என்று அழைக்கலாம்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி மிகவும் சாதகமாக இருக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கலாம். கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்ற நேரம். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். லட்சுமி தேவியின் அருளால் தோஷங்கள் அனைத்தும் தீரும்.
சிம்மம்: நிதி ரீதியாக, சிம்ம ராசிக்கு சனி வக்ர நிவர்த்தி மிகவும் சாதகமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். இந்த நேரம் வணிகத்திற்கு மிகவும் சாதகமானது. நிதி ஆதாயம் உண்டாகும். லட்சுமி தேவியிடம் சிறப்பு ஆசிகளைப் பெறுவீர்கள். சிம்ம ராசிக்காரர்கள் புதிய வேலைகளைத் தொடங்கலாம்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார அம்சம் வலுவாக இருக்கும். முதலீடு செய்வதால் லாபம் உண்டாகும். லக்ஷ்மி தேவியின் அருளால், நிதி ஆதாயம் உண்டாகும், இது நிதி அம்சத்தை பலப்படுத்தும். இந்த நேரம் வணிக வர்க்கத்திற்கு சாதகமாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
Next Gallery