Men's Health: ஒவ்வொரு ஆணும் 50 வயதிலும் ஃபிட்டாக இருக்கவே விரும்புகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள், ஆனால் பலருக்கு விரைவில் முதுமை கதவை தட்டி விடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், 50 வயதிலும் இளமையாக இருக்க விரும்பினால், நீங்கள் சில எளிய முறைகளை பின்பற்றலாம்.
பிட்டாக இருக்க முதலில் நீங்கள் சிறந்த டயட்டை எடுத்துக்கொள்வது முக்கியம், அத்தகைய சூழ்நிலையில், ஆண்கள் தங்கள் உணவில் பச்சை காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி எப்போதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும், எனவே ஆண்கள் தங்கள் வழக்கமான உடற்பயிற்சியை தொடர வேண்டும்.
ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க, நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம். ஏனென்றால், மன அழுத்தம் இல்லாமல் இருப்பதால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
உடலை இளமையாக வைத்திருக்க, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். அதனால் ஆண்கள் தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க உலர் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)