மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்? ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் காத்திருப்பு..

Old Pension Scheme In Tamil Nadu: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியப் பணம் கொடுப்பதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுக்குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Old Pension Scheme Latest News: பழைய ஓய்வூதியத் திட்டம் மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் வருமா எனஅரசு ஊழியர்கள் காத்திருப்பு.

 

1 /4

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைவில் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார் என ஜாக்டோ ஜியோ சங்கம் தெரிவித்திருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து. ஆனால் இதுவரை பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் மீண்டும் நடை முறைப்படுத்தப்படவில்லை.

2 /4

பழைய ஓய்வூதியத் திட்டம் மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமல் படுத்தப்பட்டிருக்கிறது.

3 /4

4 /4

பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் தங்கள் கடைசி மாத ஊதியத்தில் பாதித்தொகையை பெற்று வந்தனர். தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட புதிய என்பிஎஸ் (NPS) திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பஞ்சப்படியில் 10% பங்களிப்புத் தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகை ஓய்வூதிய நிதியில் சேர்க்கப்படுகிறது. அதே அளவு தொகையை அரசும் கூடுதலாக சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது