அரசியல் அலசும் பொலிட்டிக்கள் த்ரில்லர் படங்கள்! எந்த ஓடிடியில் எப்படி பார்ப்பது?

Tamil Political Thriller Movies To Watch On OTT : தமிழ் திரையுலகில் பல அரசியல் த்ரில்லர் படங்கள் வந்திருக்கின்றன. அதில், கண்டிப்பாக பார்க்க வேண்டிய சில படங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

Tamil Political Thriller Movies To Watch On OTT : தமிழ் திரையுலகை பொறுத்தவரை, பல்வேறு பாணியிலான படங்கள் வெளியாகியிருக்கின்றன. பேய் படம், காதல் படங்கள், சண்டை படங்கள் போன்றவற்றை பொழுதுபோக்கிறகாக பார்க்கும் மக்கள், அரசியல் சார்ந்த படங்களை ஏதாவது விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பார்க்கின்றனர். அந்த வகையில், கண்டிப்பாக தமிழில் பார்க்க வேண்டிய அரசியல் த்ரில்லர் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

1 /8

எமன்: விஜய் ஆண்டனி நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான படம் எமன். இதனை ஜீவா ஷங்கர் இயக்கியிருந்தார். வெளியான போது நல்ல வரவேற்பினை பெற்றிருந்த இந்த படத்தை ஜீ 5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம். 

2 /8

மாநாடு: 2021ஆம் ஆண்டு வெளியான டைம்-ட்ராவல் படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி மகேந்திரன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம். 

3 /8

மாமன்னன்: கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படங்களுள் ஒன்று, மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தார். இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

4 /8

கோ: 2011 வெளியான கோ திரைப்படம், கே.வி.ஆனந்தின் சிறப்பான படைப்புகளுள் ஒன்று. இதில் ஜீவா, கிருத்திகா, பியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய தளங்களில் பார்க்கலாம். 

5 /8

இந்தியன்: 1996ஆம் ஆண்டு வெளியான படம், இந்தியன். ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளி வருவதற்குள், இப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்த்துவிடுங்கள். 

6 /8

உரியடி: விஜயகுமார் இயக்கி-நடித்திருந்த படம், உரியடி. இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

7 /8

முதல்வன்: இப்போது இளைஞர்களாக இருக்கும் பலருக்கு குழந்தை பருவ நினைவாக இருக்கும் திரைப்படங்களுள் ஒன்று, முதல்வன். இந்த படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். இதனை யூடியூப் தளத்தில் இலவசமாகவே பார்கலாம். 

8 /8

காப்பான்: சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்திருந்த படம், காப்பான். இந்த படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.