விராட் கோலியை விட அதிகம் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்!

கிரிக்கெட்டில் அதிகம் சம்பளம் வாங்குபவரா விராட் கோலி உள்ள நிலையில், மற்ற விளையாட்டு போட்டிகளில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களை பற்றி பார்ப்போம்.

 

1 /6

கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். அவரது கால்பந்து ஒப்பந்தம் தவிர, தனது சொந்த CR7-பிராண்டட் பொருட்கள் மூலம் அதிக வருமானம் பெறுகிறார்.

2 /6

லியோனல் மெஸ்ஸி உலக அளவில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் லியோனல் மெஸ்ஸியும் உள்ளார். MLS ஒப்பந்தம் தவிர, அடிடாஸ் மற்றும் பிற பிராண்டுகளுடனான ஒப்பந்தம் மூலம் மெஸ்ஸிஸின் வருமானம் அதிகரிக்கிறது.

3 /6

லெப்ரான் ஜேம்ஸ் லெப்ரான் ஜேம்ஸ் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அவரது வருமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் ஒப்பந்தம் மூலமும், நைக் மற்றும் பிற பிராண்டுகளுடன் ஒப்புதல்கள் மூலம் அதிகரித்துள்ளது.

4 /6

கைலியன் எம்பாப்பே பிரெஞ்சு கால்பந்து நட்சத்திரமான கைலியன் எம்பாப்பே பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனுடனான ஒப்பந்தம் மற்றும் நைக் பிராண்டுகளுடனான ஒப்பந்தம் மூலம் அதிக வருமானத்தை பெற்றுள்ளார்.

5 /6

நெய்மர் ஜூனியர் பிரேசிலிய கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் அவரது ஆண்டு ஒப்பந்தம் மூலமும், பூமா மற்றும் பிற நிறுவனங்களுடனான விளம்பரம் மூலமும் அதிக வருமானம் பெறுகிறார். 

6 /6

விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பிசிசிஐ சம்பளம் தாண்டி பூமா, ஆடி மற்றும் பல பிராண்டுகளின் ஒப்புதல்கள் மூலம் வருமானம் பெறுகிறார்.