மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தந்த Bonus-ன் சில முக்கிய அம்சங்கள்!!

மத்திய அரசு தனது அனைத்து ஊழியர்களுக்கும் போனஸை அறிவித்துள்ளது. சுமார் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 2019-2020க்கான போனசை பெறுவார்கள்.

இது குறித்து இருந்த நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதற்கான அறிவிப்பை நேற்று செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், போனஸ் வழங்குவதற்கான மொத்த நிதித் தேவை 3,737 கோடி ரூபாயாக இருக்கும் என்றார். 

1 /6

"2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட போனஸ் மற்றும் உற்பத்தித்திறன் இணைக்கப்படாத போனஸுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது. போனஸ் அறிவிப்பால் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட நான்-கெஸடட் ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்கான மொத்த நிதித் தேவை ரூ .3,737 கோடியாக இருக்கும்" என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று பிற்பகல் அறிவித்தார். Credits: PTI

2 /6

விஜய தசமிக்கு முன்னால் முழு போனஸ் பணமும் ஒரே தவணையில் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இந்த நடவடிக்கை செலவினங்களை ஊக்குவித்து பொருளாதாரத்தை உயர்த்தும் என்று அவர் கூறினார். Credits: PTI

3 /6

ரயில்வே, தபால் துறை, EPFO, ESIC போன்ற வணிக நிறுவனங்களைச் சேர்ந்த 17 லட்சம் நான்-கெஸடட் ஊழியர்கள் அவர்களின் உற்பத்தித்திறனுடன் இணைக்கப்பட்ட போனஸைப் பெறுவார்கள். பிற 13 லட்சம் அரசு ஊழியர்கள் தங்கள் உற்பத்தித்திறன்-இணைக்கப்படாத போனஸைப் பெறுவார்கள். Credits: IANS

4 /6

“2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ், ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத் துறை, EPFO, ESIC முதலான நிறுவனங்களின் சுமார் 16.97 நான்-கெஸடெட் பணியாளர்களுக்கு வழங்கப்படும். இதற்கான மொத்த நிதித் தேவை ரூ .2,791 கோடியாக இருக்கும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. Credits: IANS

5 /6

லாக்டௌன் தொடங்கியதிலிருந்து பொருளாதாரத்தில் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு நிவாரணமாக இருக்கும். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அதாவது DA-வும் நிறுத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் சில அரசாங்க ஊழியர்களுக்கு மாத சம்பளவும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த போனஸ் அறிவிப்பு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. Credits: Reuters

6 /6

“Non-PLB அல்லது ad-hoc போனஸ் நான்-கெஸடட் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் 13.70 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். 946 கோடி ரூபாய் அதற்கான நிதி உட்குறிப்பாக இருக்கும்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Credits: PTI

You May Like

Sponsored by Taboola