உலகளாவிய அன்லாக் கட்டம்: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பல கட்ட லாக்டௌன்களுக்குப் பிறகு, இப்போது பல நாடுகள் கட்டம் கட்டமாக அன்லாக் செய்து கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய பிறகு, பல மாதங்களாக மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களை நாடுகள் மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன.
மக்கள் இப்போது 'புதிய இயல்பை' பின்பற்றுகிறார்கள். முகக்கவசங்களை அணிந்து தனி மனித இடைவெளியை அனைவரும் பின்பற்றுவதைக் காண முடிகிறது. பொது இடங்கள் இப்போது கடுமையான COVID-19 வழிகாட்டுதல்களுடன் திறக்கப்படுகின்றன.
இந்தியா: தானேவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் திறக்கப்பட்ட விவியானா மாலில், அன்லாக் 5-ல், மக்கள் துரித உணவு மையத்தில் வரிசையில் நிற்கிறார்கள். (PTI image)
பிரான்ஸ்: பாரிஸில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன(Reuters photo)
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பெல்ஜியத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றுகிறார்கள்.
சீனா: பெய்ஜிங்கில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் படிப்படியாக தங்கள் கல்லூரி வளாகங்களுக்குத் திரும்புகிறார்கள். (Image courtesy: Reuters)
பெல்ஜியம்: பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் பாதுகாப்பு முகக்கவசங்களை அணிந்து மாணவர்கள் மீண்டும் கல்லூரிக்கு வருகிறார்கள். (Image courtesy: Reuters)
கடுமையான நிபந்தனைகளுக்கு மத்தியில் ஜெர்மனி மீண்டும் திறக்கத் தொடங்குகிறது. தேவாலயங்கள் பக்தர்களுக்கான கதவுகளைத் திறக்கின்றன. மேலும் கார் தொழிற்சாலைகள் மீண்டும் பணியைத் தொடங்குகின்றன. (Image courtesy: Reuters)