Roasted Raisins Health Benefits: குளிர்காலத்தில் நீங்கள் வறுத்த உலர் திராட்சையை காலையில் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
உலர் பழங்கள், நட்ஸ் ஆகியவை உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. இதனை நீங்கள் எல்லா சீசனிலும் சாப்பிடலாம் என்றாலும் குளிர்காலத்தில் இவை மிக அவசியம் எனலாம்.
குளிர்காலத்தில் நீங்கள் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுடன் நட்ஸ் (Nuts) மற்றும் உலர் பழங்களை (Dry Fruits) சேர்த்து சாப்பிடுவது நல்லது.
அதில் உலர் திராட்சையும் முக்கியமானவையாகும். இதனை நீங்கள் குளிர்காலத்தில் சாப்பிடுவதால் ரத்த சோகை (Anemia) உள்ளிட்ட பல உடல் நலப் பிரச்னைகள் குணமாகும்.
அதே வேளையில் உலர் திராட்சையை வறுத்து (Roasted Raisins) சாப்பிடுவதாலும் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். அதை எப்படி தயார் செய்வது, அவற்றை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் இங்கு காணலாம்.
அடுப்பில் நெருப்பு மூட்டி, அதில் ஒரு சட்டியை நெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும். அதன்பின் ஃபோர்க்கின் முனையில் 7-8 உலர் திராட்சைகளை வைத்து அதனை நெய்யில் வைத்து மேலோட்டமாக வாட்டவும்.
அதன்பின், அவற்றை தனியாக வைத்துவிட்டு அதில் துளி அளவில் கல் உப்பை போட்டு கிளறவும். இதனை நீங்கள் தினமும் காலையில் சாப்பிடலாம்.
உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு (Iron Deficiency), கால்சியம் குறைபாடு (Calcium Deficiency) ஆகிய பிரச்னைகள் இருந்தால் அவை நீங்கும். மேலும் இது உங்களுக்கு ஆற்றலை வழங்கும்.
மேலும், உடற்சோர்வாக இருந்தால் இருந்தாலும் இதை சாப்பிட்டால் குணமடையும். முதுகு வலியும் சரியாகும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள், வீட்டு வைத்தியங்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.