டிசம்பர் 1 முதல் Indian Railways செய்துள்ள பெரிய மாற்றம் பற்றி உங்களுக்குத் தெரியுமா

இந்திய ரயில்வே 2020 டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் zero-based timetable-ஐ செயல்படுத்தியுள்ளது. இந்த கால அட்டவணையை அமல்படுத்தியதன் காரணமாக, ரயில்களின் நேரத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ரயிலில் பயணிக்க திட்டமிட்டால், நிச்சயமாக உங்கள் ரயிலின் நேரத்தை சரிபார்த்துக் கொள்ளவும். ரயிலின் நேரத்தை சரிபார்க்க ரயில்வே வலைத்தளமான www.indianrail.gov.in அல்லது NTES (National Train Enquiry System) ஐப் பார்வையிடலாம்.

1 /5

Zero based time table என்னும் நேர அட்டவணை, ​​பாதையில் எந்த ரயிலும் இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றது. ஒவ்வொரு ரயிலுக்கும் புதிய ரயில் போல நேரம் கொடுக்கப்படுகிறது. இந்த வழியில், அனைத்து ரயில்களின் இயக்க நேரமும் ஒவ்வொன்றாக தீர்மானிக்கப்படுகிறது. இதில் அனைத்து ரயில்களுக்கும் இயங்குவதற்கும் அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தப்படுவதற்கும் நேரம் அளிக்கப்படுகிறது. வேறு எந்த ரயிலின் காரணமாகவும் இந்த ரயில் தாமதப்படக்கூடாது என்பதும் மற்ற ரயில்களையும் இது பாதிக்கக்கூடாது என்பதும் கருத்தில் கொள்ளப்படுகிறது. ஐ.ஐ.டி-பம்பாய் நிபுணர்களின் ஆதரவோடு ரயில்வே இந்த கால அட்டவணையைத் தயாரித்துள்ளது. நாடு தழுவிய லாக்டௌனின் போது இது தொடர்பான பணிகள் தொடங்கின.

2 /5

வழக்கமாக ரயில்வேயின் புதிய நேர அட்டவணை ஜூலை மாதத்தில் வரும். கொரோனா நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இதை செயல்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பல புதிய ரயில்கள் தொடங்கப்படுகின்றன. அவை அடுத்த ஆண்டு ரயில்வே நேர அட்டவணையில் இடம் பெற வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கால அட்டவணை தேவைப்படுகிறது. இருப்பினும், புதிய நேர அட்டவணையில் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும். சில ரயில்கள் 5 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் முன்னோக்கி அல்லது பின்னோக்கி இயக்கப்படும்.

3 /5

தேவை இல்லாத ரயில்களை ரத்து செய்வதும், சில ரயில்களின் நிறுத்தங்களை குறைப்பதும் இப்போது பல ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும். புதிய நேர அட்டவணையில், சில மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களின் மதிப்பீடு வழங்கப்படும். சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 55 கிலோமீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் மூலம் சூப்பர்ஃபாஸ்ட் கட்டண வடிவில் ரயில்வேயின் வருமானமும் அதிகரிக்கும்.

4 /5

மூடப்படும் 10,000 நிறுத்தங்களில் பெரும்பாலானவை மெதுவாகச் செல்லும் பயணிகள் ரயில்களினுடையது. பயணிகள் ரயில்களில் எந்த நிறுத்தங்களில், குறைந்தது 50 பயணிகள் ஏறுகிறார்களோ அல்லது இறங்குகிறார்களோ, அந்த நிறுத்தங்கள் நீக்கப்படாது. புதிய கால அட்டவணையில், ஆண்டு முழுவதும் 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் பயணிக்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டு, அந்த ரயில்களின் பயணிகளுக்கு மாற்றாக ஏற்கனவே அந்த தடத்தில் ஓடும் ரயில்களுக்கான அணுகல் வழங்கப்படும்.

5 /5

ரயில்வே zero based timetable-ல் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ரயில்வே கட்டணம் அதிகரிக்கப்படாமலேயே ஆண்டுக்கு 1,500 கோடி வருமானம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். இதன் பிறகு ரயில்வே சரக்கு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். புதிய கால அட்டவணையில், அதிவேக தாழ்வாரங்களில் 15 சதவீதம் அதிகமான சரக்கு ரயில்களளை இயக்க வழி செய்யப்பட்டுள்ளது. முழு நெட்வொர்க்கிலும் பயணிகள் ரயில்களின் சராசரி வேகம் சுமார் 10 சதவீதம் அதிகரிக்கலாம்.