ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க தனது இணைய வங்கி தளத்தை புதுப்பித்து வருகிறது.
இந்த மேம்படுத்தலின் பணி காரணமாக, நவம்பர் 8 ஆம் தேதி, வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கி, SBI Yono யோனோ லைட் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் பணம் எடுக்க ஏடிஎம் சேவையைப் பயன்படுத்தலாம்.
SBI Quick மூலம் நீங்கள் ஒரு மினி அறிக்கையைப் பெறலாம். இதற்காக, நீங்கள் 092223866666 என்ற எண்ணில் மிஸ்ட் கால் கொடுக்கலாம் அல்லது MSTMT என்று டைப் செய்து இதே எண்ணுக்கு SMS அனுப்பலாம்.
உங்கள் கணக்கு SBI-ல் இருந்தால், உங்கள் கணக்கின் நிலுவைத் தொகையை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், நீங்கள் வீட்டிலிருந்த படியே கணக்கின் பேலன்சை சரிபார்க்க பல வழிகள் உள்ளன. இதனுடன், நீங்கள் கணக்கின் அறிக்கையையும் வீட்டிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இதற்கு முதலில் உங்கள் செயலியில் உள்நுழைய வேண்டும். அதன் பிறகு, ‘Navigate to account’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அங்கு உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுத்து, அதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய முடியும்.
உங்கள் இணைய வங்கி கணக்கில் உள்நுழையவும். அதன் பிறகு ‘My Accounts & Profile’-க்கு செல்லவும். இங்கே ஒரு ‘Account Statement’-ஐ காண்பீர்கள். இப்போது உங்கள் கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு, எந்த நாளிலிருந்து எந்த நாள் வரையிலான ஸ்டேட்மெண்ட் தேவை என்பதை செலக்ட் செய்யவும். பின்னர் நீங்கள் ஸ்டேட்மெண்டை ‘view, print அல்லது download’ செய்யலாம்.
உங்கள் Yono Lite SBI செயலியில் உள்நுழைந்த பிறகு ‘My Account’-ல் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, View / Download Statement-ல் கிளிக் செய்யவும். இங்கிருந்து உங்கள் அகௌண்ட் ஸ்டேட்மெண்டை நீங்கள் காண முடியும்.