இந்த Mobile App மூலம் தங்கத்தின் தூய்மையை கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

Gold Purity Mobile App: தங்கத்தை வாங்குவதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து அதன் தூய்மை பற்றியதுதான். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட காரட் அளவில் உங்களுக்கு விற்கப்படும் தங்கம் உண்மையில் அதே அளவு தூய்மையுடன் வருகிறதா என்பதை சரிபார்க்க எந்த வழிமுறையும் இல்லை. ஆனால் இப்போது ஒரு செயலியின் மூலம் அரசாங்கம் இந்த சிக்கலை எளிதாக்கியுள்ளது.

சந்தையில் விற்கப்படும் தங்கம் எவ்வளவு தூய்மையானது என்பதை இப்போது எளிதாக சரிபார்க்க முடியும். இதற்காக, நீங்கள் எந்த நகை வியாபாரிகளிடமும் செல்லத் தேவையில்லை. ஒரு மொபைல் செயலியின் மூலம் இதை சரிபார்த்து விடலாம். அரசாங்கம் நாடு முழ்வதும் Gold Hallmarking-ஐ நடைமுறைபடுத்த உள்ளது. ஜனவரி 15 முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த இந்த செயல்முறை இப்போது ஜூலை 1, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 /6

மத்திய நுகர்வோர் மற்றும் உணவு அமைச்சகம் (நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்) ‘BIS-Care App' என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க முடியும்.

2 /6

இந்த செயலியின் மூலம், நீங்கள் தங்கத்தின் தூய்மையை சரிபார்ப்பது மட்டுமல்லாமல், அது தொடர்பான எந்தவொரு புகாரையும் அளிக்கலாம். இந்த செயலியில் உரிமங்களின் உரிமம், பதிவு மற்றும் அடையாள எண் தவறாக இருந்தால், வாடிக்கையாளர்கள் உடனடியாக புகார் செய்யலாம். இந்த செயலியின் மூலம், வாடிக்கையாளர் உடனடியாக அளித்த புகார் பற்றிய தகவல்களைப் பெறுவார்.

3 /6

இந்த செயலியை மத்திய அரசு இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. இதில் வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தூய்மையையும் சரிபார்க்கலாம். இந்த ஆண்டு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 (நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019) முழு நாட்டிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

4 /6

BIS தரநிலைகளை செயல்படுத்துவதோடு, இது உண்மைத்தன்மையின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்கிறது. சமீபத்தில், நாடு முழுவதும் சுமார் 37,000 தரநிலைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பிஐஎஸ் தெரிவித்துள்ளது. BIS-Care செயல்பாடு தற்போது Android பயனர்களுக்கு மட்டுமே உள்ளது. IOS பயனர்களுக்கு தற்போது இது கிடைப்பதில்லை.

5 /6

1. Google Play Store-ல் சென்று, BIS-Care செயலியைத் தேடி பதிவிறக்கவும். 2. பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், பதிவு செயல்முறை தொடங்கும் 3. உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும் 4. உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை OTP மூலம் வெரிஃபை செய்யவும். 5. இதற்குப் பிறகு இந்த செயலியைப் பயன்படுத்த நீங்கள் தயாராக இருப்பீர்கள். 6. நீங்கள் செயலியைத் திறக்கும்போது, ​​பல ஆப்ஷன்களுடன் Verify Hallmark-க்கான ஆப்ஷனும் வரும். 7. Verify Hallmark-கில் கிளிக் செய்தால், ​​ஹால்மார்க் எண்ணை உள்ளிட்டவுடன் தங்கத்தின் தூய்மை என்னவென்று உங்களுக்குத் தெரியவரும்.

6 /6

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தங்கம் குறித்து அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும். 2021 நடுப்பகுதியில், 'ஒன் நேஷன் ஒன் ஸ்டாண்டர்ட்' திட்டமும் நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.