கேரளாவிலுள்ள வயநாடு பசுமை நிறைந்த ஒரு அழகான இடமாகும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த பகுதியில் ஏராளமான சுவாரஸ்யமான இடங்கள் உள்ளது.
வயநாட்டில் பாணாசுர மலைகளுக்குள் அமைந்துள்ளது பாணாசுர சாகர் அணை, இங்கு படகு சவாரி போன்ற பல சாகச விளையாட்டுக்களை விளையாடி மகிழலாம்.
வயநாடு மாவட்டத்தில் உள்ள எடக்கல் குகைகள் சுற்றிப்பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடமாகும், இங்குள்ள குகைகளில் விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டு கண்களுக்கு காட்சியளிக்கிறது.
மிகசிறந்த அருவிகளில் ஒன்றாக இந்த சூச்சிப்பாரா அருவி கருதப்படுகிறது, கோடையில் உங்களுக்கு குதூகலமாக இருக்க நீங்கள் இந்த அருவிக்கு செல்லலாம்.
வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான வைத்திரி நறுமண பொருட்களுக்கு பெயர்போன இடம், இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதியில் மலையேற்றம், சாகச விளையாட்டுக்கள், படகு சவாரி போன்றவற்றை செய்துகொண்டு இயற்கையை ரசிக்கலாம்.
கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய விலங்குகள் சரணாலயம் வயநாடு வனவிலங்குகள் சரணாலயம் தான், இங்கு அழியும் நிலையிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் இரண்டும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.