பிரமிக்கவைக்கும் மாதுளையின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்

மாதுளை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழம். பழத்தின் உள்ளே எண்ணற்ற விதைகள் காணப்படும். விதையை சுற்றிலும் மெல்லிய சதைப்பற்றுடன் காணப்படும்.மாதுளம் பழத்தில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. 100 கிராம் மாதுளம் பழத்தில் 83 கலோரிகள் உள்ளன. அதில் 1.2 கிராம் கொழுப்பு, 1.7 கிராம் புரதம், 19 கிராம் மாவு சத்து மற்றும் 4 கிராம் நார்ச்சத்து அடங்கும். மறுபுறம் சிலருக்கு மாதுளை சாறு ஒவ்வமையை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அதிக அளவு சாப்பிட்டால் அரிப்பு, வீக்கம், மூக்கு ஒழுகுதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே மாதுளையின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்னவென்று பார்ப்போம்.

1 /5

மாதுளை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு பழமாகும்.

2 /5

மாதுளம் பழத்தில் ஊட்டச் சத்துக்கள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளைக் அடங்கியுள்ளன. மேலும் இது மாவு சத்து, வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

3 /5

மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:  * எலும்புகள் ஆரோக்கியமாகும்  * மன ரீதியிலான உளவியல் அழுத்தத்தைக் குறைக்க உதவும்  * இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது * கேன்சர் அபாயத்தை குறைக்கிறது * உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் பிரீ ரேடிகள்களால் ஏற்படும் சேதத்தைத் குறைக்கவும் உதவுகிறது.

4 /5

சிலருக்கு மாதுளை சாறு ஒவ்வமையை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அதிக அளவு சாப்பிட்டால் அரிப்பு, வீக்கம், மூக்கு ஒழுகுதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

5 /5

மாதுளை விதைகள் ஆரோக்கியமற்றவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், அதிக அளவு சாப்பிடுவது ஏற்கனவே நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு குடல் தொடர்பான பிரச்சனைகளை உரு வாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.