நமக்கு தைப் பொங்கல்..மற்ற மாநிலத்துக்கு?..கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Pongal Festival 2023: தமிழகத்தில் அறுவடைத் திருநாளாம் பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. மேலும் தை முதல் நாளை பொங்கல் பண்டிகையாக நாம் கொண்டாடுகையில் மற்ற மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அந்த நாள் கொண்டாடப்படுகிறது.

1 /10

தமிழ்நாடு: தமிழகத்தில் அறுவடைத் திருநாளாம் பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புத்தாடை அணிந்தும், பானையில் பொங்கல் சமைத்து வழிபடுவார்கள்.

2 /10

டெல்லி மற்றும் ஹரியானா: டெல்லி மற்றும் ஹரியானாவில் சங்கராந்தி என்கிற பெயரில் கொண்டாடுகின்றனர். பண்டிகையில் நெய், அல்வா மற்றும் அரிசி பாயாசம் ஆகியவை முக்கிய உணவாக படைக்கப்படுகிறது.

3 /10

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் மாகி என்கிற பெயரில் தங்கள் அறுவடை நாளை விமர்சையாகக் கொண்டாடுகின்றனர். இது சீக்கியர்களின் முக்கிய நிகழ்வாகும். பால், கரும்புச் சாறு, அரிசி பாயாசம் கட்டாய உணவாக இடம் பெறும்.

4 /10

குஜராத்: குஜராத்தில் "உத்ராயண்" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இங்கு பட்டம் விடும் நிகழ்ச்சி பிரபலமான திருவிழாவாகும். 1000த்திற்கும் மேற்பட்ட பட்டங்கள் விடப்படும். காய்கறிகள் நிறைந்த உணவுகள், பலகாரங்கள் படையலுக்கு வைக்கப்படுகிறது.   

5 /10

ஹிமாச்சலப் பிரதேசம்: இங்கு ’மஹா சாஜி’ என்கிற பெயரில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். படையலில் இனிப்புக் கிச்சடி செய்வது முக்கிய உணவாகும்.

6 /10

அசாம்: மாக் பிஹு, போகலி பிஹு என்றும் அழைக்கப்படுகிறது, இது அசாமில் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருவிழாவாகும்

7 /10

கர்நாடகா: கர்நாடகாவில் ’சுக்கி’ பண்டிகை விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. கரும்பு முக்கிய இடம் பிடிக்கிறது. அதேபோல் ஏறு தழுவும் மாடுகளைக் கழுவி அதற்கு பொட்டு வைத்து வழிபடுவதையும் முக்கியமாக செய்கின்றனர்.

8 /10

கேரளா: மகர விளக்குப் பூஜையை ஒட்டி இந்நிகழ்வு நடைபெறும். இதனால் மகர ஜோதி தெரிவது முக்கிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது. 

9 /10

ஆந்திரா: ஆந்திராவில் பொங்கல் பண்டிகை மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.இங்கு தமிழ்நாட்டை போலவே பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் நடைபெறுவது வழக்கம்.

10 /10

மஹாராஷ்டிரா: மகார் சங்ராதி என பெருநாளைக் கொண்டாடுகின்றனர். அதிகாலை  நல்லெண்ணெய் தேய்த்து தலைக் குளிப்பதை முக்கிய வழக்காகக் கொண்டிருக்கின்றனர். அல்வா, லட்டு, போளி என பல இனிப்பு வகைகளை கடவுளுக்குப் படைக்கின்றனர்.