மண் உருண்டை உண்ட கண்ணனுக்கு இந்த வெண் உருண்டை!!

  • Aug 10, 2020, 18:32 PM IST
1 /5

கண்ணனுக்கு வெண்ணெய் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கண்ணனை கள்வனாக்கியதே வெண்ணெய்தானே!! அந்த வெண்ணையை வைத்து ‘வா கண்ணா’ என நாம் பக்தியோடு அழைத்தால் கண்ணன் வராமல் இருப்பானோ!!   

2 /5

அவல் கண்ணனுக்கு மிகவும் பிடித்தது. கண்ணனின் சிறு வயது தோழரான குசேலர் அவரைக் காண வரும்போது அவருக்குப் பிடித்த அவலைத் தான் கொண்டு வந்தார். அவலும் அவல் பாயசமும் கண்ணண் ஆவலாய் சாப்பிடும் பண்டங்கள்.

3 /5

அரிசி மாவையும் உளுந்து மாவையும் வெண்ணெய் கலந்து உருண்டைகளாய் உருட்டி எண்ணெயில் பொறித்து எடுத்து கண்ணனுக்குப் படைத்தால், அவன் சப்புக் கொட்டி சாப்பிட மாட்டானோ!!

4 /5

சீடை கண்ணனுக்குப் பிடித்த பலகாரம். வெல்லப் பாகை சீடை மாவில் கலந்து அதை உருண்டையாய் உருட்டி பொறித்து எடுத்தால், கண்ணன் வெல்லப் பாகாய் உருகிப் போவான். நம் வீட்டில் உள்ள சின்னக் கண்ணன்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

5 /5

மண்ணை உருண்டையாக உண்ட கண்ணனுக்கு உருண்டையாய் இருக்கும் அனைத்து லட்டு வகைகளும் பிடிக்கும். வழக்கமாக இந்த நாளில் ரவையால் ஆன லட்டு செய்வது விசேஷம். ரவையையும் சர்க்கரையையும் அரைத்து, அதில் பால், நெய், தேங்காய் கலந்து லட்டாகப் பிடித்து கண்ணனுக்குப் படைத்தால் விருப்பத்துடன் அவன் உண்பான்.