பழமை வாய்ந்த கணேஷ் பந்தலை பார்வையிட்டார் மோடி!

  • Sep 08, 2019, 08:17 AM IST
1 /7

மகாராஷ்டிராவின் மும்பைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை விர்லே பகுதியில் 97 ஆண்டு பழமை வாய்ந்த கணேஷ் பந்தலை பார்வையிட்டார். பிரதமர் மோடி மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் நேரடியாக விநாயகரை தரிசனம் செய்ய சென்றார்.

2 /7

பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தபோது மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யரி, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மாநில பாஜக பிரிவு தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

3 /7

இலாப நோக்கற்ற அமைப்பான லோக்மண்ய திலக் சேவா சங்கத்தால் நடத்தப்படும் கணபதி பந்தலில், பிரதமர் மோடி

4 /7

குஜராத்தி மொழியில் கையால் எழுதப்பட்ட குறிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி எழுதினார். லோக்மண்யா பால் கங்காதர் திலக்கின் ஸ்வராஜின் முழக்கத்தைக் இந்த குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

5 /7

கையால் எழுதப்பட்ட குறிப்புகளில், பிரதமர் மோடி ஸ்வராஜ் இப்போது நல்லாட்சியை உருவாக்க ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் எழுதினார்.

6 /7

ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஊக்குவிப்பதற்காக, பொது இடத்தில் கணேஷ் சதூர்த்தி திருவிழாவை ஆரம்பித்த லோக்மண்யாவின் மார்பளவு சிலைக்கு மோடி மாலை அணிவித்தார்.

7 /7

தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, பண்டிட் நேரு, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உள்ளிட்ட பிற பிரமுகர்களும் இந்த பந்தலை இதற்கு முன்னர் பார்வையிட்டுள்ளனர்.