Rose Day 2024: ரோஸ் டே கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க..

Rose Day 2024: இந்த ஆண்டின் ‘காதலர் தின’ வாரம் ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, இன்று ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. இதை நாம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா? இங்கு தெரிந்து  கொள்வோம். 

Valentines Day 2024 Rose Day Celebration And Reason Behind It: பிப்ரவரி மாதம் வந்தாலே பலருக்கு இந்த மாதத்தில் கொண்டாடப்படும் காதலர் தினம்தான் நினைவிற்கு வரும். இந்த கலாச்சாரம், மேற்கத்திய நாடுகளுக்கு சொந்தமானதாக இருந்தாலும், இந்தியாவில் இதற்கு மவுசு அதிகம். அதிலும், காதலர் தினம் மட்டுமல்லாது அந்த வாரத்தில் கொண்டாடப்படும் ரோஸ் டே, ஹக் டே, கிஸ் டே என எதையும் நாம் விட்டுவைப்பதில்லை. அந்த வகையில், பிப்ரவரி 7ஆம் தேதியான இன்று ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. இது ஏன் கொண்டாடப்படுகிறது? இதற்கு பின்னால் உள்ள வரலாறு என்ன? இங்கு பார்ப்போம். 

1 /7

பிப்ரவரி 7ஆம் தேதியான இன்று, ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் விரைவில் வரவுள்ளதை தொடர்ந்து, இதற்கு முன்னாளிருந்தே ரொமேண்டிக் ஆன பல தினங்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட தினங்களுள் ஒன்று, ரோஸ் டே. இந்த தினத்தை கொண்டாடுவதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க. 

2 /7

ரோஸ் டேவை காதலர்கள் மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை. சிங்கிளாக இருப்பவர்களும், தங்கள் மீது இருக்கும் அன்பை தாங்களே வெளிப்படுத்திக்கொள்ள இந்த தினத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் ஒருவருக்கு ரோஜா பூவை கொடுக்க விரும்பினால் அதை கொத்தாக வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரே பூவை வாங்கி சர்ப்ரைஸ் செய்தாலே போதும். 

3 /7

ரோமனிய புராணத்தில் ரோஜாவை மர்மம் மற்றும் உணர்ச்சி நிறைந்தது என குறிப்பிடுகின்றனர். அவர்களின் கலாச்சாரத்தின் படி, ரோஜாப்பூ அழகு மற்றும் அன்புக்கு பெயர் போன வீனஸ் கிரகத்தின் ஒரு குறியீடாகும். 

4 /7

ரோமானிய கலாச்சாரத்தில் மட்டுமல்லாமல், அரபு நாடுகளின் கலாச்சாரத்தில் கூட, ரோஜாப்பூவின் நிறத்தையும் அதன் நறுமணத்தையும் காதலுடன் சேர்த்து பார்க்கின்றனர். இந்த நாடுகளில் வாழ்ந்த முன்னோர்கள், ஒருவர் மீது தங்களுக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்த ரோஜாப்பூவை பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. 

5 /7

அரபு, ரோமானிய நாடுகளின் இந்த ரோஜா கலாச்சாரத்தினால் காதலர் தினத்திற்கு முன்னர் ரோஸ் டே கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. பொதுவாக, தனது அன்புக்குரியவருடன் சண்டை என்றால் பலர் அவர்களுக்கு ரோஜாப்பூவை வாங்கி கொடுத்து சமாதானம் செய்வர். அதற்கு மட்டும் உபயோகிக்காமல் ரோஜாவை உங்கள் அன்புக்குரியவரை சர்ப்ரைஸ் செய்வதும் உங்கல் காதலை வளர்க்க உதவும். 

6 /7

பெண்களுக்கு பூ என்றாலே பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலான சமயங்களில் பூவை பெண்களுடன் உவமைப்படுத்தி கூறுவதும் உண்டு. ஆனால், யாரும் பெரிதாக பேசாத விஷயம் ஒன்று உள்ளது. ஆண்களுக்கு பூ என்றால் பிடிக்கும் என்பதுதான் அது. 

7 /7

தங்கள் வாழ்நாளில் ஒரு ஆணிற்கு அவனது மரணத்தின் போதுதான் பூ கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதனால் இந்த ரோஸ் டேவில் உங்கள் காதலருக்கு அல்லது உங்களுக்கு பிடித்த ஆணிற்கு பூச்செண்டை வாங்கி கொடுத்து குஷிப்படுத்துங்கள்.