ரூ.20000 வரை கடன் தரும் ஜிபே! கடனுக்கு வட்டி எவ்வளவு? குறைந்தபட்ச தவணை மிகக்குறைவு...

How To Avail Loan: கூகுள் பே ஆப் மூலம் இருபதாயிரம் ரூபாய் வரை கடன் வாங்கலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வின் போது, நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது...

Google Pay: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் (NBFCs) இணைந்து இந்த கடன்களை வழங்குகிறது ஜிபே...

1 /8

கடன் சேவைகளை வழங்க தொழில்நுட்ப நிறுவனமான DMI ஃபைனான்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ள Gpay, 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் கொண்ட கடன்களை வழங்குகிறது. 

2 /8

குறைந்தபட்ச மாதாந்திர தவணைத்தொகை ரூ. 111 என்று சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது

3 /8

கூகுள் பே கடனை வாங்க அதன் செயலியில் உள்ள க்ரெடிட் லைன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கலாம். ஸ்டேட் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியவற்றில் மட்டும் உள்ள இந்த வசதி, தகுதி வாய்ந்த நபர்களுக்கு கிடைக்கும் 

4 /8

கடன் ஒப்புதல் விண்ணப்பத்தை நிரப்பவும், அது கடன் வழங்குபவரால் மதிப்பாய்வு செய்யப்படும். .

5 /8

உங்கள் திருப்பிச் செலுத்தும் திட்டம் உட்பட தேவையான KYC தகவல் மற்றும் வங்கி விவரங்கள், ஜிபேயின் கூட்டாளர் வங்கி தளத்தில் புதுப்பிக்கப்படும்

6 /8

வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து தெரிந்துக் கொண்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்ப செயல்முறையை முடிக்க SMS மூலம் கிடைக்கும் OTPயைப் பதிவிடவும்.

7 /8

ஓடிபி சரிபார்ப்பு முடிந்ததும் விண்ணபத்தை சமர்ப்பிக்கவும்.  உங்கள் கடனின் நிலை குறித்த கூடுதல் தகவலுக்கு கடனளிப்பவரைத் தொடர்பு கொள்ளவும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் காணப்படும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை