PIC's பாகுபலி மூலம் உலக பிரபலமான தமன்னா பிறந்த நாள் : ஒரு பார்வை

நடிகை தமன்னா பாட்டியா இன்று தனது 28_வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் 1989-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி மகாராஷ்டிரா தலைநகரம் மும்பையில் பிறந்தார்.

  • Dec 21, 2017, 20:37 PM IST
1 /7

நடிகை தமன்னா பாட்டியா இன்று தனது 28_வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் 1989-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி மகாராஷ்டிரா தலைநகரம் மும்பையில் பிறந்தார். இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பாகுபலி படம் மூலம் உலக முழுவதும் பிரபலம் ஆனார்.

2 /7

2005-ல் "சாந்த் சே ரோசன் செகரா" என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் "கேடி" படம் மூலம் அறிமுகமானார். ஆனால் "கல்லூரி" திரைப்படம் தான் அவருக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இவர் பாலிவுட் படத்தில் ஆறுமுகம் ஆனாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

3 /7

நடிகை தமன்னாவுக்கு ஆனந்த் என்ற ஒரு அண்ணன் உண்டு. அவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆவார். அவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளியில்தனது பள்ளிப்படிப்பை முடித்தார். 

4 /7

2005-ல் "சாந்த் சே ரோசன் செகரா" என்ற இந்தி திரைப்படத்திலும், அதே ஆண்டு "சிறீ" என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்தார். 2006-ல் தமிழில் "கேடி" படம் மூலம் அறிமுகமானார். அதே ஆண்டு "வியாபாரி" என்ற தமிழ் படத்திலும் நடித்தார்.

5 /7

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் "AAA" அன்பானவன் அசராதவன் அடங்காதவன். தற்போது இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைபடங்களில் நடித்து வருகிறார்.

6 /7

தற்போது விக்ரம் கூட ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்து வருகிறார். இது பக்காவான கமர்‌ஷியல் படம் தான். ஆனால் விக்ரம்-தமன்னாவின் காட்சிகள் அழகான காதல் படத்துக்கான தனிச்சிறப்புடன் இருக்கும் என ‘ஸ்கெட்ச்’ படத்தின் இயக்குனர் விஜயசந்தர் கூறியுள்ளார். 

7 /7

தென் இந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தினாலும், அவ்வப்போது பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.