புதனின் அருளால் இனி ‘இந்த’ ராசிகளுக்கு இனி நல்ல காலம் தான்!

ஜோதிடத்தில் புதன் ஒரு நடுநிலை கிரகமாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் புதம் கிரகம். அதனால் வித்யாகாரகன் என அழைக்கப்படுகிறது.

புதன் ஜூன் 24, 2023 அன்று, மதியம் 12:35 மணிக்கு மிதுன ராசியில் நுழையும் நிலையில், ஜூலை 8, 2023 வரை அங்கேயே தங்கி இருப்பார். இது  சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். சில ராசிகளுக்கு இனி நல்ல காலம் தான்.

 

1 /7

புதன் கிரகம்: ஒருவருடைய ஜாதகத்தில் புதன் மட்டும் வலுவாக இருந்தால் போதும், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அந்த ஜாதகர் தன்னுடைய அறிவின் மூலமாகத் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அடுத்தவர் துணையின்றி முன்னேறி விடுவார். மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் புதம் கிரகம். அதனால் வித்யாகாரகன் என அழைக்கப்படுகிறது.

2 /7

புதன் பெயர்ச்சி: ஜூன் மாதம் 24ம் தேதி அன்று இதுன ராசிக்கு புதம் கிரகம் பெயர்ச்சி ஆக உள்ள நிலையில், இது அனைத்து ராசிகளையும் ஓரளவுக்கு பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். இந்த ராசிகள் எவை என  அறிந்து கொள்ளலாம். 

3 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். சமூக, அலுவலக தொடர்புகள் அதிகரிக்கும். உங்கள் முடிவுகள் சரியானவை என்பதை நிரூபிக்கும். முக்கியமான காரியங்களில் வெற்றி உண்டாகும். சக ஊழியர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். பணம் எதிர்பாராத அளவில் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு பலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும்.

4 /7

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புத்திசாலித்தனத்தினால் வேலையில் வெற்றி கொள்வீர்கள். உங்கள் பேச்சில் இனிமை இருக்கும். மக்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நெருங்கி வருவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.

5 /7

கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமான பலன்களைத் தரும். உங்கள் பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பெயரும் மதிப்பும் ஏற்படும். மக்கள் உங்களைப் புகழ்வார்கள். முன்னேற்றம் அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரம் விரிவடையும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும், வங்கி இருப்பு அதிகரிக்கும்.

6 /7

கும்ப ராசிக்காரர்களுக்கு மிதுன ராசியில் புதன் நுழைவது சாதகமான பலன்களைத் தரும். உங்கள் அறிவு பெருகும் மற்றும் அறிவின் அடிப்படையில் நீங்கள் லாபம் ஈட்டுவீர்கள். உங்களின் நினைவாற்றல் மற்றும் செறிவு அதிகரிக்கும். நிதி ஆதாயம் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். புதிய பாடத்தில் நிறைய கற்றுக் கொண்டு பலன் அடைவீர்கள். புதிய வேலை வாய்ப்பு அல்லது இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.