இந்த ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் பட்லர்
சென்னை அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தூபே அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் உள்ளார்.
முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் உள்ளார். அவர் 491 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.அவருக்கும் 2வது இடத்தில் இருக்கும் கே.எல் ராகுலும் இடையிலான ரன் இடைவெளி 226 ரன்கள்
2வது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல் ராகுல் இருக்கிறார். அவர் 265 ரன்கள் விளாசியுள்ளார். இந்த தொடரில் கேப்டன்களின் பேட்டிங் மிகச் சிறப்பாக உள்ளது.
சென்னை அணியில் இருந்து பெங்களூரு அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் டூபிளசிஸ் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடுகிறார். அவர் இதுவரை 250 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார்.
சென்னை அணியில் முதன்முறையாக விளையாடி வரும் ஷிவம் தூபே, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலிக்கிறார். இதுவரை 239 ரன்கள் எடுத்துள்ள அவர் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல் போட்டியில் 236 ரன்கள் எடுத்துள்ள கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 5வது இடத்தில் உள்ளார்.