குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு முக்கிய ஆதரவை வழங்கும் 8 நடைமுறை பழக்கங்கள்!

குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படவும் கல்வி, சுகாதாரம், வேலை மற்றும் உறவு அனைத்திலும் தெளிவான முடிவெடுக்கவும் இந்த 8 வழிகாட்டு நடைமுறைகள் அவர்களை நிச்சயம் ஊக்குவிக்க உதவும். உங்கள் குழந்தைகள் அன்றாட ஆரோக்கியத்தில் இதுவும் ஒருமுக்கிய பங்காற்றும் நல்ல பழக்கங்களாகும். 

இந்த 8 நடைமுறை உதவிக்குறிப்புகள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு முக்கிய ஆதரவை வழங்குகின்றன மற்றும் அவர்கள் திறம்படச் செயல்பட உதவுகின்றன. குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் திறமையுடன் இருக்க அவர்கள் கற்க வேண்டிய சில நடைமுறை பழக்கங்கள் வாழ்நாள் முழுவதும் உதவியாக இருக்கும். குழந்தைகள் மன ஆரோக்கியத்தை ஆதரிக்க சில குறிப்புகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. 

1 /8

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் குடும்பப்பிரச்சினை உருவாக்கக்கூடாது. குழந்தைகள் குடும்பச் சூழலால் ஒருபோதும் மனந்தளராமல் பாதுகாக்க வேண்டும்.  

2 /8

குழந்தைகளிடம் நம்பிக்கையான உறவு வளர வேண்டும். அவர்கள் மனம் புண்படும்படி பேசக்கூடாது. மேலும் குழந்தைகள் தங்கள் சுற்றுப்புற உறவுகளில் நம்பிக்கையான உறவைத் தேர்ந்தெடுத்துப் பழக வேண்டும்.  இது அவர்களின் மன ஆரோக்கியத்தை ஆதரிக்கும் கருவியாகும். 

3 /8

உங்கள் குழந்தைகளிடம் சுயமரியாதை குணங்களை வளர்க்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் பழக்கம் போன்றவை அனைத்தும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். 

4 /8

குழந்தைகள் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். வாரத்திற்கு நகம் வெட்டுதல், தலை முடி பராமரித்தல் போன்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். 

5 /8

ஆரோக்கியமான உணவுகளைக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுக்க வேண்டும். குறிப்பாகப் பழங்கள், காய்கறிகள் அதிகம் உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். 

6 /8

சமூக ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்து உடல் ஆற்றல்மிக்க விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். பின்னர் வீட்டுப்பாடத்திற்கான வேளைகளை முடித்துவிட்டு நேரத்துடன் சாப்பிட்டு உறங்க வேண்டும்.   

7 /8

குழந்தைகள் காலை மற்றும் மாலை இருவேளை உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வு, ஆற்றல் நிலைகள் மற்றும் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது என்று கூறுகின்றனர். மேலும் குழந்தைகள்  நாளொன்றுக்குக் குறைந்தது 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

8 /8

சிறு குழந்தைகளுக்கு 9-11 மணிநேர தூக்கம்  நிச்சயம் தேவைப்படுகிறது. மேலும் ஒரு சீரான உறக்க நேரம் குழந்தைகளுக்கு போதுமானதாகவும் மனத் தெளிவாகவும் இருக்க உதவுகிறது.