நடிகை ஸ்ரீதேவி, எமி ஜாக்சன், நடாசா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதை அறிவித்தனர்...!
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் காதல் கதை அனைவரும் தெரிந்த ஒன்று தான். திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட சில பிரபலங்களில் ஸ்ரீதேவியும் ஒருவர். ஸ்ரீதேவி கணவர் போனி கபூரை மணந்தபோது தனது முதல் குழந்தை ஜான்வி உடன் ஏழு மாத கர்ப்பமாக இருந்தார்.
காதலன் ஜார்ஜ் பனாயோட்டோவுடன் நிச்சயதார்த்தம் செய்ததாக அறிவித்தவுடன், அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது ரசிகர்களுடன் சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்து கொண்டார்.
செர்பிய நடிகையான நடாஸாவும் ஹார்டிக் பாண்ட்யாவும் இந்த ஆண்டு ஜனவரியில் நிச்சயம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டனர். தம்பதியினர் விரைவில் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று அறிவித்தனர்.
நடிகை சரிகா, திருமணத்திற்கு முன்னர் நடிகர் கமல்ஹாசனுடன் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்திருந்தார். ஸ்ருதி ஹாசன் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சரிகா மற்றும் கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்டனர்.
முன்னாள் மிஸ் இந்தியா மற்றும் நடிகையுமான நேஹா துபியா சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. கடந்த ஆண்டு மே மாதம் ஒரு தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். நேஹா துபியா ஏற்கனவே கர்ப்பமாக இருந்தபின் திருமணம் செய்துகொண்டதை வெளிப்படுத்தினர்.
சமீபத்தில், நடிகர் அர்ஜுன் ராம்பால் தனது காதலி கேப்ரியெல்லா டிமெட்ரியேட்ஸுடன் ஒரு குழந்தையை வரவேற்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.
நடிகை அமிர்தா திடீரென பியூ ஷகீல் லடக்கை மணந்தார். விரைவில், தம்பதியினர் தங்கள் கர்ப்பத்தை அறிவித்தனர்.
தேசிய விருது பெற்ற நடிகை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸுடன் டேட்டிங் செய்து கர்ப்பமடைந்தார். இருப்பினும், விவியன் ரிச்சர்ட்ஸ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய மறுத்தபோது, நீனா குப்தா தனது பெண் குழந்தை மசபா குப்தாவைப் பெற்றெடுத்தது மட்டுமல்லாமல், குழந்தையை ஒற்றை தாயாக வளர்த்தார்.
நடிகை லிசா ஹெய்டன் 2016 அக்டோபரில் திருமணம் செய்து கொண்டு, மே 2017 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
'தி லைஃப் இன் எ மெட்ரோ' நடிகர் ரன்வீர் ஷோரியுடன் நீண்ட நேரம் டேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு ரகசிய விழாவில் நடிகரை திருமணம் செய்து கொண்டார், சில மாதங்கள் கழித்து தனது கர்ப்பத்தை அறிவித்தார்.