இந்த வாரம் ஓடிடியில் மாஸான புது படங்கள் ரிலீஸ்! எதை, எதில் பார்க்கலாம்?

Upcoming OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் பல புது படங்கள் வெளியாகின்றன. அந்த படங்களின் லிஸ்டையையும், அவற்றை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்க்கலாம். 

Upcoming OTT Releases : இந்தியாவில் ஓடிடி தளங்கள் சமீப காலமாக பெருகி விட்டதால், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள், வெகு விரைவிலேயே மக்களுக்கு அவரவர் இல்லத்திலேயே பார்க்க வசதியாக ஓடிடியில் வெளியாகின்றன. இதனால், பலர் செலவு மீதமாவதாக உணருவதோடு, இன்னும் பல படங்களை ஓடிடிகளில் பார்க்க முடிவதாக தெரிவிக்கின்றனர். வாரா வாரம், ஓடிடி தளங்களில் பல புதிய படங்கள் வெளியாகின்றன. அவற்றின் லிஸ்டையும் அவற்றை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்க்கலாம். 

1 /15

சார்லி நடித்திருக்கும் ரூபன் தமிழ் திரைப்படத்தை, ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

2 /15

மூன்றாம் மனிதன் தமிழ் திரைப்படத்தை சிம்ப்ளி சவுத் தளத்தில் பார்க்கலாம். 

3 /15

பேட்மேன் : கேப்ட் க்ருசேடர் என்ற இந்த ஹாலிவுட் அனிமேஷன் தொடரை, ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைமில் பார்க்கலாம். 

4 /15

ரெயில்: வெளிமாநில தொழிலாளிகள், வெவ்வேறு ஊர்களில் படும் சிரமங்களை காண்பித்த படம், ரெயில். இந்த படத்தை, ஆஹா தளத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி பார்க்கலாம். 

5 /15

த்ரிஷா நடித்திருக்கும் முதல் வெப் தொடர், பிருந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இத்தொடர் உருவாகியிருக்கிறது. இந்த தொடரை, சோனி லிவ் தளத்தில் நாளை (ஆகஸ்ட் 2ஆம் தேதி) முதல் பார்க்கலாம்.

6 /15

தெப்ப சமுத்ரம்:  சில நாட்களுக்கு முன்னர் தியேட்டர்களில் வெளியான தெலுங்கு படம், தெப்ப சமுத்ரம். இந்த படத்தை, ஆஹா தளத்தில் நாளை பார்க்கலாம்.   

7 /15

ரீஸ்டோர் பாய்ண்ட் :  செக் மொழியில் (Czech)உருவாகியிருக்கும் படம், ரீஸ்டோர் பாய்ண்ட். இந்த படத்தை பிஎம்எஸ் தளத்தில் நாளை காணலாம். 

8 /15

ரக்‌ஷனா: தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் திரைப்படம் ரக்‌ஷனா. இந்த படத்தை ஆஹா தளத்தில் நாளை முதல் காணலாம்.

9 /15

நடன்ன சம்பவம்: இந்த மலையாள படத்தை, சிம்ப்ளி சவுத் தளத்தில் ஆகஸ்ட் 2அம் தேதியான நாளை முதல் காணலாம். 

10 /15

மவுண்டெய்ட்ன் குயின் : உண்மை சம்பவங்களையும் கதாப்பாத்திரங்களையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் டாக்குமெண்ட்ரி தொடர் மவுண்டெய்ன் குயின். இந்த ஆங்கில தொடரை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை பார்க்கலாம்.

11 /15

மாடர்ன் மாஸ்டர்ஸ் எஸ் எஸ் ராஜமௌலி:  இயக்குநர் ராஜமௌலி பங்கேற்கும் நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்ட்ரி இது. இதனை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

12 /15

கிங்டம் ஆஃப் தி ப்ளேனட் ஆஃப் தி ஏப்ஸ்: இந்த பிரம்மான ஆங்கில-ஹாலிவுட் திரைப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.

13 /15

ட்யூன் பார்ட் 2: இந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்ட படங்களுள் ஒன்று, ட்யூன் பாகம் 2. இந்த படத்தை, ஜியோ சினிமா தளத்தில் ஆகஸ்ட் 2 முதல் காணலாம். 

14 /15

அ குட் கேர்ள்ஸ் கைட் டு மர்டர் : கொலை, த்ரில்லர் கதை பாணியில் உருவாகியிருக்கும் ஹாலிவுட் தொடர் இது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

15 /15

மேற்கூறியவை மட்டுமன்றி, இன்னும் சில படங்களும் தொடர்களும் கூட ஓடிடியில் வெளியாகின்றன. அதன் லிஸ்ட் இதோ: >பிரேக்கிங் அண்ட் ரீ எண்டிர்ங் - சீன மொழி தொடர் - நெட்ஃப்ளிக்ஸ் >பார்டர்லெஸ் ஃபாக் -இந்தோனேசிய மொழி - நெட்ஃப்ளிக்ஸ் >தி இன்ஃப்ளுவன்ஸர் - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் >ஸ்லீப்பிங் டாக்ஸ் - லையன்ஸ் கேட் ப்ளே >டாரட் - ஆங்கிலம் - ஜியோ சினிமா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் >தி பைக் ரைடர்ஸ் - ஆங்கிலம் - பிஎம்எஸ் >ஹோலி மஹாராஜா - மராத்திய மொழி - அமேசான் ப்ரைம்  >துஜ்ஃபே மெயின் ஃபிதா சீசன்2 - இந்தி தொடர் - அமேசான் ப்ரைம்