இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது 41ஆவது பிறந்தநாளை திங்கள்கிழமை (டிச. 12) கொண்டாடுகிறார். 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல, யுவராஜ் சிங் மிக முக்கியமானவராக இருந்தார். அந்த வகையில், இந்த புகைப்படத் தொகுப்பில், யுவராஜ் சிங்கின் சிறந்த சாதனைகள் மற்றும் அவரது மனைவி ஹேசல் கீச்சுடனான அவரது காதல் கதையை இங்கு பார்ப்போம்.
யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் 11,778 ரன்களை குவித்து 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு ஓவரில் அனைத்து பந்திலும் (6 பந்துகள்) சிக்ஸர் அடித்தார், யுவராஜ் சிங். டி20 போட்டிகளில் இந்த சாதனையை செய்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அதில் இருந்து மீண்டார். பின்னர், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடினார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ஹேசல் கீச் ஆகியோர் கடந்த நவ. 30ஆம் தேதி, தங்களது 6வது திருமண நாளை கொண்டாடினர். தம்பதியருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் பிறந்த 'ஓரியன்' என்ற ஒரு மகன் உள்ளார்.
யுவராஜ் சிங் மற்றும் ஹேசல் கீச் இருவருக்கும் நவம்பர் 12, 2015 இல் நிச்சயதார்த்தம் செய்து, ஒரு வருடம் கழித்து 2016 நவம்பர் 30ஆம் தேதி, அன்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு சண்டிகரில் சீக்கிய முறைப்படி திருமணத்தை நடந்தது. அதைத் தொடர்ந்து டெல்லியில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
2011 உலகக்கோப்பையில் தொடர் நாயகனாக யுவராஜ் சிங், அவரது 41ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.