முற்றிலும் துறந்த முனிவர்கள் -30 டிகிரி குளிரில் என்ன செய்கிறார்கள்?

Monks In Himalayas: கங்கோத்ரி இப்போது மூடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடையில் அக்ஷய திருதியை அன்று மீண்டும் திறக்கப்படும். இந்த நடுக்கும் குளிர் காலத்தில் தேவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு வசிக்க முடியாத அளவுக்கு குளிர் நிலவுவதாக ஐதீகம்!

 

 

உத்தரகாண்ட் கடவுள்களின் தேசம் மற்றும் மகான்களின் தேசம். இன்றும் இங்குள்ள அனைத்து குகைகளிலும் துறவறம் மேற்கொண்டவர்கள் அவர்கள் -5 முதல் -30 டிகிரி செல்சியஸ் குளிரில் இங்கு தங்கி தவம் செய்கிறார்கள்.

1 /7

கங்கோத்ரி தாமின் நுழைவாயில்கள் அக்டோபர் 26 அன்று மூடப்பட்டன. அடுத்த ஆண்டு கோடையில் அக்ஷய திருதியை அன்று மீண்டும் திறக்கப்படும்.   

2 /7

இந்த கடும் குளிர் காலத்தில் இங்கு தெய்வங்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது! சாதாரண பயணிகளோ அல்லது யாத்ரீகரோ இப்போது இங்கு செல்ல முடியாது. ஆனால் சில துறவிகள் இந்த குளிர்காலத்தில் இங்கு தங்கி தவம் இருக்கின்றனர்  

3 /7

கங்கோத்ரி தாமில் உள்ள குகைகள் மற்றும் மலைகளில் வசிக்கும் துறவிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது  

4 /7

துறவிகளின் குடில்களில் இருக்கும் பொருட்கள் திருட்டு போவதாக புகார்  

5 /7

ஆன்மீக நோக்கங்களுக்காக குகைகளிலும் குடில்களிலும் வசிப்பவர்களின் பொருட்கள் திருடப்படுவது அதிர்ச்சியளிக்கிறது

6 /7

நடுக்கும் குளிரில்,18 வயது முதல் 85 வயதுள்ள துறவிகள் தங்கியிருக்கின்றனர்  

7 /7

கங்கோத்ரி தாமில் இருந்து 1500 மீட்டர் தூரத்தில் சுவாமி ஆத்மானந்த சரஸ்வதியின் குகை உள்ளது. இங்கு சுமார் ஐம்பது பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு போலீசாரின் உதவி அடிக்கடி தேவைப்படுகிறது.