இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புது வரவுகள்! எந்த படத்தை, எந்த தளத்தில் காணலாம்?

OTT Release This Week : அனைத்து வாரங்களை போலவும், இந்த வாரமும் பல புது படங்களும் தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதையும், எந்த தளத்தில் அவற்றை பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்!

OTT Release This Week : ஓடிடி தளங்களின் வருகை பெருகியிருப்பதை ஒட்டி, தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் வெகு சில நாட்களிலேயே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டு விடுகின்றன. திரைப்படங்கள் மட்டுமன்றி ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை என்னென்ன தொடர்கள் புதிதாக எடுக்கப்படுகின்றனவோ, அவையும் ஓடிடியில் வெளியாகின்றன. இதையடுத்து மக்களின் பொழுதுபோக்கு பன்மடங்காக உயர்ந்திருப்பதை தாண்டி, பல பட தயாரிப்பு நிறுவனங்களும் இதனால் பயன்பெற்று வருகின்றன. இதையடுத்து, இந்த வாரம் ஓடிடி தளங்களில் எந்தெந்த படங்கள் வெளியாகின்றன என்பதை பார்ப்போமா? 

1 /11

சத்யராஜ், விஜய் வசந்த் நடிப்பில் வெளியான படம் வெப்பன். இந்த படத்தை ஆஹா தமிழ் தளத்தில் வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் பார்க்கலாம். 

2 /11

காழ்: பாடகரும் நடிகருமான யுகேந்திரன் நடித்திருக்கும் படம் காழ். இந்த படத்தை நாளை முதல் ஆஹா தமிழ் தளத்தில் காணலாம். 

3 /11

சட்னி சாம்பார் : யோகி பாபு, மைனா நந்தினி உள்ளிட்டோர் நடித்திருகும் வெப் தொடர் ‘சட்னி சாம்பார்’. இதனை ஹாட்ஸ்டார் தளத்தில் ஜூலை 26ஆம் தேதி காணலாம். 

4 /11

பவி கேர்டேக்கர்: காமெடி கதையாக உருவாகியிருக்கும் பவி கேர்டேக்கர் மலையாள படத்தை சிம்ப்ளி சவுத் தொலைக்காட்சியில் நாளை முதல் காணலாம்.

5 /11

எவ்வம் (Yevam): இந்த தெலுங்கு படத்தை ஆஹா தளத்தில் நாளை முதல் காணலாம்.

6 /11

ஒன் லைஃப்: ஒன் லைஃப் ஆங்கில படத்தை பிஎம்எஸ் அல்லது ப்ரைம் தளத்தில் காணலாம். இது, ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

7 /11

கிராண்ட்மா: சோனியா அகர்வால் நடித்திருக்கும் கிராண்ட்மா திரைப்படத்தை, தெலுங்கில் ஆஹா தளத்தில் நாளை முதல் காணலாம். 

8 /11

செஃப் சிதம்பரா: செஃப் சிதம்பரா கன்னட படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை முதல் காணலாம்.

9 /11

ப்ளடி இஷ்க்: ப்ளடி இஷ்க் இந்தி பேய் த்ரில்லர் தொடரை, ஹாட்ஸ்டாரில் நாளை முதல் காணலாம்.

10 /11

பையா ஜீ: பையா ஜீ இந்தி படத்தை ஜீ 5 தளத்தில் நாளை முதல் காணலாம்.

11 /11

மேற்கூறிய படங்களை தவிர இன்னும் சில படங்களும் தொடர்களும் கூட ஓடிடியில் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகின்றன. அதன் லிஸ்டை இங்கு பார்ப்போம்.  >எக்கோரி பிரேம் கதா - இந்தி - ஜியோ சினிமா >பரதநாட்டியம் - தெலுங்கு -ஆஹா >சல்தி ரஹே ஜிந்தகி - இந்தி - ஜீ 5 >க்லியோ சீசன் 2 - ஜெர்மன் - நெட்ஃப்ளிக்ஸ் >தி டெகேமரான் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் >டோக்கியோ ஸ்விண்ட்லர்ஸ் - ஜப்பானிய மொழி - நெட்ஃப்ளிக்ஸ் >கோஸ்ட் பஸ்டர்ஸ் ஃப்ரோசன் எம்பையர் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் >விச் பிரிங்க்ஸ் மீ டு யூ - ஆங்கிலம் - ஜியோ சினிமா >ஸ்வயம்வரம் சம்பவ பாகுலம் - மலையாளம் - மனோரமா மேக்ஸ்