7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை பெறவுள்ளார்கள். அகவிலைப்படி எவ்வளவு உயரும்?
7th Pay Commission: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தில் இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்கிறது. இருப்பினும் திருத்தங்கள் வழக்கமாக மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்படும். எனினும், ஜனவரி மற்றும் ஜூலை முதலான அகவிலைப்படி உயர்வு அரியர் தொகை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும். இந்த முறை அகவிலைப்படி 4% அதிகரித்தால், 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மாதாந்திர மற்றும் ஆண்டு அடிப்படையில் எவ்வளவு பலன் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.
பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஆசை நிறைவேறவில்லை. 8வது ஊதியக்குழு பற்றிய எந்த அறிவிப்பையும் அரசாங்கம் வெளியிடவில்லை. இதனால் ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் நிலவுகிறது. எனினும், அவர்களுக்கு இன்னும் சில நாட்களில் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. அது ஆறுதலை அளிக்கலாம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரக்கூடும். வழக்கமாக ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு மார்ச் மாதமும், ஜூலை மாதத்துக்கான அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலும் வரும். அந்த வகையில், ஜூலை 2024- -க்கான டிஏ உயர்வு பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தில் இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்துகிறது. இருப்பினும் திருத்தங்கள் வழக்கமாக மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்படும். எனினும், ஜனவரி மற்றும் ஜூலை முதலான அகவிலைப்படி உயர்வு அரியர் தொகை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும்.
ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 50% ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கிடைத்துள்ள ஏஐசிபிஐ எண்களை வைத்து பார்த்தால் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படியும் 4% அதிகரிக்கும் என தெரிகிறது. எனினும், இன்னும் ஜூன மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் வரவேண்டியுள்ளது. அதன் பிறகுதான் டிஏ உயர்வு குறித்த துல்லியமான விவரம் தெரியும்.
இந்த முறை அகவிலைப்படி 4% அதிகரித்தால், 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மாதாந்திர மற்றும் ஆண்டு அடிப்படையில் எவ்வளவு பலன் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம். ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு மாதா மாதம் ரூ.720, ஆண்டுக்கு ரூ.8,640 அதிகரிப்பு இருக்கும். ரூ.20,000 அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு மாதா மாதம் ரூ.800, ஆண்டுக்கு ரூ.9,600 அதிகரிப்பு இருக்கும். ஆகக் கிடைக்கும். அதேபோல், ரூ.25,000 அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு மாதா மாதம் ரூ.1,000, ஆண்டுக்கு ரூ.12,000 அதிகரிப்பு இருக்கும்.
மாத அடிப்படை சம்பளம் ரூ.30,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.1,200, ஆண்டு அதிகரிப்பு-ரூ.14,400; மாத சம்பளம் ரூ.40,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.1,600, ஆண்டு அதிகரிப்பு-ரூ.19,200; மாத சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.2,000, ஆண்டு அதிகரிப்பு-ரூ.24,000; மாத சம்பளம் ரூ.60,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.2,400, ஆண்டு அதிகரிப்பு-ரூ.28,000.
அடிப்படை ஊதியம் ரூ.70,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.2,800 ஆண்டு அதிகரிப்பு-ரூ.33,600; அடிப்படை ஊதியம் ரூ.80,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.3,200 ஆண்டு அதிகரிப்பு-ரூ.38,400; அடிப்படை ஊதியம் ரூ.90,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.3,600 ஆண்டு அதிகரிப்பு-ரூ.43,200; அடிப்படை ஊதியம் ரூ.1,00,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.4,000 ஆண்டு அதிகரிப்பு-ரூ.48,000.
அடிப்படை ஊதியம் ரூ.1,25,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.5,000 ஆண்டு அதிகரிப்பு-ரூ.60,000; அடிப்படை ஊதியம் ரூ.1,50,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.6,000 ஆண்டு அதிகரிப்பு-ரூ.72,000; அடிப்படை ஊதியம் ரூ.1,75,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.7,000 ஆண்டு அதிகரிப்பு-ரூ.84,000; அடிப்படை ஊதியம் ரூ.2,00,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.8,000 ஆண்டு அதிகரிப்பு-ரூ.96,000; அடிப்படை ஊதியம் ரூ.2,25,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.9,000 ஆண்டு அதிகரிப்பு-ரூ.108,000; அடிப்படை ஊதியம் ரூ.2,50,000 உள்ள ஊழியர்களுக்கு மாத அதிகரிப்பு-ரூ.10,000 ஆண்டு அதிகரிப்பு-ரூ.120,000.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.