இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் புது படங்கள்! லிஸ்ட் ரொம்ப பெருசு..

Upcoming Tamil Movies : ஆகஸ்டு மாதம் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அவற்றை எந்த தேதியில் பார்க்கலாம் தெரியுமா?

Upcoming Tamil Movies : 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒரு சில தமிழ் படங்களே திரையரங்குகளில் வெளியாகின. ஆனால், அதற்கு நேர் மாறாக பல படங்கள் அடுத்த ஆண்டு பாதியில் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன. இந்த படங்களில் ஒரு சில சிறு பட்ஜெட் படங்கள் என்றாலும், ஒரு சில மிகவும் எதிர்பார்த்த படங்களாகும். அதிலும், இந்த வாரம் முக்கிய படங்கள் சில தியேட்டரில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?

1 /8

இந்த வாரம், பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?

2 /8

போட்: யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் படம், போட். இந்த படத்தை சிம்பு தேவன் இயக்கி இருக்கிறார். இதன் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருப்பதை ஒட்டி, வரும் ஆகஸ்டு 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

3 /8

ஜமா: இளங்கோவன் இயக்கி நடித்திருக்கும் படம், ஜமா. இதற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம், ஆகஸ்டு 2ஆம் தேதி வெளியாகிறது.

4 /8

மழை பிடிக்காத மனிதன்: விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம், மழை பிடிக்காத மனிதன். இந்த படம், வரும் ஆகஸ்டு 2ஆம் தேதி வெளியாகிறது. இதில் சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

5 /8

பேச்சி: காயத்ரி, பாலா சரவணன் ஆகியோர் நடித்திருக்கும் படம், பேச்சி. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்டு 2ஆம் தேதி வெளியாகிறது. 

6 /8

அந்தகன்: பிரசாந்த் நடிப்பில் பல ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த அந்தகன் திரைப்படம், ஒரு வழியாக வரும் ஆகஸ்டு 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிம்ரன் வில்லியாக நடிக்க, பிரியா ஆனந்த் பிரசாந்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

7 /8

ரகு தாத்தா: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரகு தாத்தா படம், வரும் ஆகஸ்டு 15ஆம் தேதியன்று வெளியாகிறது. 

8 /8

தங்கலான்: விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில், விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதனை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார்.