'இருங்க பாய்’ 2025ல் கம்-பேக் கொடுக்க காத்திருக்கும் 5 ஹீரோக்கள்!! யாரெல்லாம் தெரியுமா?

Tamil Actors With Come Back Films In 2025: 2024ஆம் ஆண்டு, தமிழ் திரையுலகில் உள்ள பல ஹீரோக்களுக்கு “அவ்ளோதான் நம்பள முடிச்சுவுட்டாங்க போங்க..” வருடமாக இருந்தது. ஆனால், அவர்களுக்கு இன்னும் வலுவான கதையுடன் கூடிய படங்கள் 2025ல் காத்துக்கொண்டுள்ளன. 

Tamil Actors With Come Back Films In 2025: 2024ஆம் ஆண்டின் இறுதிக்கு வந்து விட்டோம். இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அப்படி வெளியான படங்களும் நெகடிவ் விமர்சனங்களை பெற்று மண்ணை கவ்வியது. இப்படி தோல்வியடைந்த படங்களில் நடித்த ஹீரோக்கள், அடுத்து வலுவான கதைக்கொண்ட படங்களிலும் நடித்து வருகின்றனர். இந்த படங்கள், 2025ல் வெளியாக இருக்கின்றன. அப்படி, கம்-பேக் கொடுக்க காத்திருக்கும் நடிகர்கள் யார் யார் தெரியுமா?

1 /7

சூர்யாவிற்கு பெரிய சறுக்கலாக அமைந்த படம், கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படம் பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு சில கோடிகளை மட்டுமே வசூலித்தது. 2024ஆம் ஆண்டு சூர்யாவை முடித்து விட்ட ஆண்டாக இருந்தாலும், 2025ல் அவருக்கு ஹிட் கொடுக்க 2 படங்கள் காத்துக்கொண்டுள்ளன. அதில் ஒன்று, ‘ரெட்ரோ’. கார்த்திக் சுப்புராஜ்ஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2 /7

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம், 2025ல் சூர்யாவிற்கு ஹிட் கொடுக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3 /7

நடிப்பின் மன்னனாக விளங்கும் கமல்ஹாசனுக்கும், 2024ஆம் ஆண்டு பெருந்தோல்வியை கொடுத்த ஆண்டாக இருந்தது. ஆனால், இவர் 2025ல் மரண கம்-பேக் கொடுக்க காத்திருக்கிறார். மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்திருக்கும் இவர், அன்பறிவ் இயக்கத்தில் இன்னொரு படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளது. 

4 /7

விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம், பலரது ரசனையுடன் சரியாக ஒட்டவில்லை. இதனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இந்த நிலையில், இவர் அடுத்ததாக அருண் குமார் இயக்கத்தில் “வீர தீர சூரன் பாகம் 2” படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், அடுத்த அண்டில் வெளியாகிறது. இது, பல ஆண்டுகளாக ஹிட் கொடுக்காத விக்ரமுக்கு பெரிய வெற்றியை தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5 /7

ரஜினி நடிப்பில் வெளிவந்த லால் சலாம் மற்றும் வேட்டையன் இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இதனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூலி படமாவது ஹிட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /7

நெல்சனுடன் மீண்டும் ஜெயிலர் 2 படம் மூலம் கைக்கோர்க்க இருக்கும் ரஜினிக்கு, அடுத்த ஆண்டு அற்புத ஆண்டாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

7 /7

நடிகர் அஜித்குமார் படங்கள் எதுவும் கடந்த 2 ஆண்டுகளாக வெளியாகவில்லை. அவர் தற்போது நடித்திருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களுமே 2025ஆம்ஆண்டில்தான் வெளியாகின்றன. இதனால் இவ்விறு படங்களும் இவருக்கு கம்-பேக் கொடுக்கும் படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.