Volcanic Eruption ஐஸ்லாந்தில் எரிமலை சீற்றம், 4 வாரங்களில் 40,000 நிலநடுக்கங்கள்

ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை சீற்றம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 

 

பூகம்பங்கள் ஏற்படலாம் என்பதால் பல வாரங்களாக அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கும் அந்தப் பகுதி மக்களுக்கு எரிமலை வெடிப்பு நிவாரணம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனம் மயக்கும் இந்த புகைப்படங்களை பாருங்கள்

Also Read | நூதனமான முறையில் டிரக்கில் வொயின் பாட்டில்கள் Smuggling Video   

1 /6

தலைநகர் ரெய்காவிக் (Reykjavik) அருகே ஐஸ்லாந்தின் தென்மேற்கு பிராந்தியத்தில் எரிமலை வெடிப்பு தொடங்கியுள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகரிலிருந்து குறைந்தது 30 கிலோமீட்டர்  ) தொலைவில் அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உல்ள ஃபாக்ராடல்ஸ்ஃப்ஜால் மலையின் அருகே எரிமலை வெடித்துச் சிதறியது. (Photograph:AFP)

2 /6

எரிமலை வெடிப்பு தொடர்பான ஹெலிகாப்டர் காட்சிகளை ஐஸ்லாந்திய வானிலை ஆய்வு அலுவலகம் வெளியிட்டுள்ளது (Icelandic Meteorological Office (IMO)). எரிமலைக்குழம்பு மட்டுமல்ல, மாக்மா (magma)வும் அங்கு அதிகமாக பரவுவதைக் காணலாம். (Photograph:AFP)

3 /6

கடந்த நான்கு வாரங்களில், தீபகற்பத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பூகம்பங்கள் பதிவாகியுள்ளன, இது 2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் பதிவுசெய்யப்பட்ட 1,000-3,000 என்ற பூகம்பங்கங்களை விட பல மடங்கு அதிகம் என்பது கவலையளிக்கும் விஷயம். (Photograph:AFP)

4 /6

இந்த வெடிப்பு கிரிண்டவிக் மக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும், பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருக்கும் என்றும் IMO கூறியது. (Photograph:AFP)

5 /6

2010 ஆம் ஆண்டில் ஒரு எரிமலை வெடித்தது. அப்போது 900,000 விமானங்கள் நிறுத்தப்பட்டது, மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் தற்போதைய எரிமலை வெடிப்பினால் வளிமண்டலத்தில் சாம்பல் அல்லது புகை அதிக அளவு பரவாது.   (Photograph:AFP)

6 /6

  எரிமலை வெடிப்பிற்கு பிறகும் ரெய்காவிக்கின் Keflavik சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. ஆனால் விமான சேவையை தொடரலாமா என்னும் முடிவை விமான நிறுவனங்களே எடுத்துக் கொள்ளலாம்.   (Photograph:AFP)