Health News: ஏலக்காயின் நன்மை ஏராளம், தெரிந்துகொண்டு பயன் பெறுவோம்!!

பச்சை ஏலக்காய் மசாலாப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. ஏலக்காய் கடந்த பல நூற்றாண்டுகளாக உணவில் பயன்படுத்தப்படுவதோடு, பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதிலும் இது பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயின் சுவை சற்று இனிமையாக இருக்கிறது. 

இது உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பதால், இதை பலர் புதினாவுடன் ஒப்பிடுகிறார்கள். குளிர்காலத்தில் இஞ்சி தேநீரை போலவே ஏலக்காய் டீக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காய்கறிகள் முதல் இனிப்புகள் வரை அனைத்திலும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளன. ஏலக்காய் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒரு அற்புத பொருளாகும்.

1 /5

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு ஏலக்காய் நன்மை பயக்கும். இது தொடர்பான ஒரு ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு 12 வாரங்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய் தூள் வழங்கப்பட்டது. 12 வாரங்களுக்குப் பிறகு, இவர்கள் அனைவருக்கும் இரத்த அழுத்த அளவு சாதாரண அளவிற்கு வந்துவிட்டது. இதற்குக் காரணம் ஏலக்காயில் அதிக ஆண்டிஆக்சிடெண்டுகள் இருப்பதுதான். இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

2 /5

ஏலக்காய் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவும் சேர்மங்களைக் கொண்டுள்ளது. எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஏலக்காய் தூள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உடலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது என்று தெரியவந்துள்ளது. இது தவிர, மனிதர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் இதே போன்ற முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.  

3 /5

ஏலக்காயில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கவும், இதய செயல்பாட்டை மேம்படுத்தவும், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கவும் உதவுகின்றன என்று எலிகள் மேல் மெற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4 /5

வாய் புத்துணர்ச்சியைப் பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் பெருஞ்சீரகத்தை மட்டுமே நம்புகிறார்கள். ஆனால் ஏலக்காயும் வாய் புத்துணர்ச்சிக்கு ஒரு சிறந்த வழியாகும். வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அகற்ற இது உதவுகிறது. பாக்டீரியாக்களின் காரணமாக காரணமாக துர்நாற்றம், பல் சிதைவு மற்றும் ஈறு நோய் ஏற்படுகின்றன. ஏலக்காய் வாயின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது.  

5 /5

லேசான வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சினையை சமாளிக்க ஏலக்காய் உதவுகிறது. எங்காவது பயணம் செய்யும்போது இந்த பிரச்சனைகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள ஏலக்காயை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். குமட்டல் அல்லது வாந்தி சங்கடம் உங்களுக்கு எற்பட்டால், வாயில் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காயை போட்டு மெதுவாக மெல்ல வேண்டும். அவ்வாறு செய்வது நிம்மதியைத் தரும். (குறிப்பு: எந்தவொரு தீர்வையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும். இந்த தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)