நம் நாட்டிலுள்ள நீர்ப்பறவைகளில் மிகப் பெரியது கூழைக்கடா. பெண்ணைவிட ஆண் உடல் அளவில் பெரியது.
பருமனான உடலைக் கொண்டிருந்தாலும், மற்ற பெரிய நீர்ப் பறவைகளைப் போல நீண்ட கால்கள் கிடையாது, குட்டையாகவே இருக்கும். அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.
சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும் இந்த நீர்பறவைகள் அலகிலும் அதன் கீழே ஓட்டியுள்ள பையிலும் கரும்புள்ளிகள் இருக்கும்.
நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள மரங்களில் மற்ற நீர்ப்பறவைகளுடன் கூடு கட்டும். இவை தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
நீர்நிலைகளில் வாயைத் திறந்து தண்ணீருடன் மீன்களைச் சேகரிக்கும். மீன்கள் ஓரளவு சேர்ந்த பிறகு, நீரை வெளியேற்றிவிட்டு உண்ணும்.