சண்டையின் போது பெண்களிடம் ஆண்கள் விவாதிப்பதை தவிர்ப்பது ஏன்?

எந்த ஒரு ஆரோக்கியமான உறவிற்கும் தகவல் தொடர்பு மிக மிக முக்கியம். குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி இரண்டு பக்கமும் பேசுவது ஒரு ஆரோக்கியமான உறவிற்கு முக்கியமான ஒன்று. ஆனால் பல ஆண்கள் சண்டையின்போது விவாதங்களை தவிர்க்கிறார்கள்.

 

1 /6

பல ஆண்கள் விவாதங்களை தவிர்க்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை பற்றி பேசும்போது ஆழமாக உரையாடினால் பிரச்சனை வளர்ந்து கொண்டே போகும் என்று, அந்த சமயத்திற்கு அதனை தவிர்க்கிறார்கள் அல்லது பெரும்பாலும்  சரி என்று ஒப்புக்கொண்டு தீர்வு காண்கிறார்கள்.   

2 /6

ஆண்கள் பொதுவாக வெளிப்படையாக பேச மாட்டார்கள், அதனாலும் சில ஆண்கள் விவாதங்களிலிருந்து  விலகிவிடுவார்கள்.   

3 /6

ஆண்கள் ஏன் விவாதங்களை தவிர்க்கிறார்கள்  என்பதில் ஈகோ முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஆண்கள் தங்களது சொந்த கருத்தை பின்பற்ற நினைக்கிறார்கள் மற்றவர்களின் பரிந்துரைகளை ஏற்க மறுக்கிறார்கள் இதனாலே விவாதங்களை தவிர்த்து, அவர்கள் சொல்வதையே சரி என்கிறார்கள்.   

4 /6

ஒரு விவாதத்தில் ஆழமாக பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசிவிட்டால் அவர்களின் பலவீனங்கள் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்திலே சிலர் விவாதிப்பது இல்லை.  

5 /6

தங்கள் உறவில் பாதுகாப்பாக உணரவில்லை என்றாலும் அல்லது அவர்களின் வெளிப்படைத்தன்மை அவர்களுக்கு எதிராக பின்னர் பேசப்படலாம் என்பதற்காகவும் பயத்தில் ஆழமான உரையாடல்களை ஆண்கள் தவிர்ப்பார்கள்.  

6 /6

பெண்களைப் போல் ஆண்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையும், வேலையையும் பிரித்துப் பார்க்க இயலாது.  மனநிலையை சீர்படுத்துவதற்காகவே சில உரையாடல்களை தவிர்த்து விடுவார்கள்.