இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தோனி விண்ணபிக்க முடியாது ஏன்?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மோடி விண்ணபிக்க முடியாது.  அதற்கான காரணம் என்ன? குறித்து பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவடைகிறது. அதன்பிறகு புதிய பயிற்சியாளர் நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. 

1 /7

20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

2 /7

ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கவுதம் கம்பீர் உள்ளிட்ட வீரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் பிசிசிஐ எதிர்பார்க்கிறது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி டீல் ஓகே செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

3 /7

இதனிடையே பிசிசிஐ -க்கு சென்றுள்ள விண்ணப்பத்தில் தோனி, அமித்ஷா, மோடி ஆகியோரின் பெயரிலும் விண்ணப்பம் அனுப்பப்பட்டிருக்கிறது. போலியாக பலர் இப்படியான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

4 /7

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி, 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

5 /7

இந்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், ஒரு பிளேயராக விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு முதல் ஒரு பிளேயராக விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

6 /7

இந்த சூழலில் ரசிகர்கள் பலர் தோனியை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க முடியாது?. ஏன் என்ற காரணத்தை பார்க்கலாம். 

7 /7

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வேண்டும் என்றால் எந்தவொரு பிளேயரும் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அதனால், அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்ய முடியாது.