Post Office Franchise: ₹5000 இருந்தால் போதும்; லாபம் கொழிக்கும் அஞ்சல் அலுவக வணிகம்

தபால் அலுவலக வியாபாரம் செய்ய, தபால் அலுவலக உரிமம் பெற்று வியாபாரத்தை தொடங்கினால் லாபத்தை அள்ளலாம்.  வெறும் 5000 ரூபாய் இருந்தால் போதும். அஞ்சல் வலையமைப்பின் கீழ் 1 லட்சம் 55 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. இந்தியா போஸ்ட் புதிய தபால் நிலையங்களைத் திறப்பதற்கான உரிமத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 

Post Office Franchise: தபால் அலுவலக வியாபாரம் செய்ய, தபால் அலுவலக உரிமம் பெற்று வியாபாரத்தை தொடங்கினால் லாபத்தை அள்ளலாம்.  வெறும் 5000 ரூபாய் இருந்தால் போதும். அஞ்சல் வலையமைப்பின் கீழ் 1 லட்சம் 55 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. இந்தியா போஸ்ட் புதிய தபால் நிலையங்களைத் திறப்பதற்கான உரிமத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 

1 /5

தபால் அலுவலக உரிம திட்டத்தின் கீழ், எந்தவொரு தனிநபரும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் ஒரு தபால் நிலையத்தைத் திறக்கலாம். தபால் அலுவலகம் முக்கியமாக இரண்டு வகையான உரிமங்களை வழங்குகிறது. முதல் - பிரான்சைஸ் அவுட்லெட்  மற்றும் இரண்டாவது - போஸ்டல் ஏஜெண்ட்.

2 /5

இந்தியா போஸ்ட் வழங்கும் அஞ்சல் அலுவலக சேவைகள் அனைத்தும், பிரான்சைஸ் அவுட்லெட் ( Franchise Outlet) கீழ் வருகின்றன. ஆனால் விநியோகம் தொடர்பான போஸ்டல் ஏஜெண்டிற்கான சேவைக்கான உரிமையானது தபால் சேவை இல்லாத இடங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

3 /5

ஒரு தபால் நிலையத்தைத் திறக்க, குறைந்தது 200 சதுர அடி அலுவலக பரப்பளவைக் கொண்டிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தபால் நிலையம் திறக்க முடியும். இதற்காக, 8 வது தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இதனுடன், மிக முக்கிய விஷயம் என்னவென்றால், எந்த குடும்ப உறுப்பினரும் தபால் துறையில் இருக்கக்கூடாது.

4 /5

ஒரு தபால் நிலையம் திறக்க நீங்கள் அதிகம் முதலீடு செய்ய வேண்டியதில்லை. பிரான்சைஸ் அவுட்லெட் என்பது சேவையை அடிப்படையாக கொண்டது என்பதால்,  அதன் முதலீடு குறைவாக உள்ளது. ஆனால் ஒரு அஞ்சல் முகவருக்கான முதலீடு அதிகமாக உள்ளது, ஏனெனில் நீங்கள் ஸ்டேஷனரி பொருட்களையும் வாங்க வேண்டும்.

5 /5

தபால் அலுவலக உரிமை பெற பாதுகாப்பு தொகையாக,  நீங்கள் குறைந்தபட்சம் 5000 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு நீங்கள் https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf என்ற முகவரியில் அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம். ஸ்பீட் போஸ்டிற்கு ரூ .5, மனியார்டருக்கு ரூ .3-5, அஞ்சல் முத்திரை மற்றும் ஸ்டேஷனரியில் 5% கமிஷன். இந்த வகையில், வெவ்வேறு சேவைகளுக்கு வெவ்வேறு கமிஷன்கள் கிடைக்கின்றன. இதில் நல்ல லாபம் பார்க்கலாம்.