கொரோனா நுண்கிருமியால் உலகமே ஆடிப் போயிருக்கிறது. அனைவரும் வீடுகளில் அடைந்து, முகத்தை மூடி, யாரையும் தொடாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவு முறையால் நோய்த் தொற்றுக்ளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான சில குறிப்புகளை சித்த வைத்திய முறை கூறுகிறது.  சித்த வைத்தியத்தை மட்டுமே பயன்படுத்தி கொரோனாவுக்கான சிகிச்சையை கொடுப்பது தொடர்பான ஆராய்ச்சியில் மத்திய அரசின் நிறுவனம் CCRS மேற்கொள்ளவிருக்கும் தகவல்களும் தற்போது வெளியாகி அனைவருக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் நிலையில் இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். 


Read Also | COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்


1. காரமான, கசப்பான உணவுகளை உட்கொள்ளலாம். காரம், கசப்பு, துவர்ப்பு போன்ற சுவையுள்ள உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் இனிப்பு, புளிப்பு போன்றவை உடலுக்கு ஆற்றலை கொடுத்தாலும் அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  எனவே  இனிப்பையும் புளிப்பையும் குறைக்கலாம்.
2. இஞ்சி, எலுமிச்சை, பனவெல்லம் ஆகிய மூன்றையும் சேர்த்து பானகம் தயாரித்து குடிப்பது நல்ல பலன் தரும்.
3. கபசுரக் குடிநீரை தினசரி பருகலாம்.
4. ஆடாதோடை மணப்பாகு பிரமானந்த பைரவம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.


Read Also | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?


5. உணவில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லியை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். 
6. தூதுவாளையுடன், மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து சூப்பாக தயாரித்து பருகலாம்.
7. வாரத்தில் ஒருநாள் வாழைத்தண்டை சாப்பிடலாம்.
8. ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தலாம்.