வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல பயனர்கள் தங்கள் நடன வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து ஒரே இரவில் சமூக ஊடக நட்சத்திரங்களாக மாறி வருகின்றனர். சில செல்லப்பிராணிகள் நடனமாடுவதையும் நாம் இணையத்தில் பார்த்துள்ளோம். எனினும், எருமைகள் போன்ற பண்ணை விலங்குகள் நடனமாடுவதை அவ்வளவாக காண முடியாது. தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் இதை காண முடிகின்றது. 


ஒரு பெண் தனது வீட்டு முற்றத்தில் எருமைக்கு உணவளிக்கிறார். அதன் பின்னர், அவர் எருமைக்கு முன்னால் பாங்க்ரா நடனமாடுகிறார். ஆனால், அவரே எதிர்பாராத விதமாக, அந்த எருமையும் அவரைப் போலவே நடனமாடத் தொடங்குகிறது. பயங்கர மூடில் வந்த எருமை ஆடிய ஆட்டத்தில், அதன் மேல் இருந்த கம்பளியும் கீழே விழுகிறது. பெண் ஆடிய நடனத்தை பார்த்து, அதை அப்படியே காபி செய்து ஆடிய எருமையின் ஆட்டத்தை பார்த்து அங்கு அமர்ந்திருந்த குழந்தைகள் சிரிக்கத் தொடங்கினர். 


மேலும் படிக்க | சிரிப்ப அடக்க முடியாது: நக்கல் சிங்கத்தின் நையாண்டி வேலை, வைரல் வீடியோ


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘videonation.teb’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டது. சூப்பராக வைரலான இந்த வீடியோ 30,000 வியூஸ்களைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இதற்கு ஏகப்பட்ட லைக்குகளையும் அளித்து வருகிறார்கள். அந்த பெண் தனது நடனத்தை காட்டி தனது வளர்ப்பு எருமையையும் ஆட வைத்தது நெட்டிசன்களுக்கு வியப்பை அளிக்கின்றது. எருமை நடனமாடியதை நெட்டிசன்களால் நம்ப முடியவில்லை. 


இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். “ ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். எருமையையே நடனமாட வைத்துவிட்டாரே” என்று ஒருவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


“இதுதான் உண்மையான இந்திய எருமை. இசையை கேட்டால், இதனால் ஆடாமல் இருக்க முடியாது” என்று ஒருவர் வேடிக்கையாக தெரிவித்துள்ளார். அந்த பென்ணின் நடனமும், அவர் அசால்டாய் எருமையை டான்ஸ் ஆட தூண்டுவதும், அந்த எருமையும் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் அசத்தலான நடனத்தை ஆடுவதும் இணையவாசிகளை சிரிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. 


பெண்ணைப் போல் எருமை நடனமாடும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



மேலும் படிக்க | என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்... இணையத்தை கலக்கும் நாய்-பூனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ