சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில் பல்வேறு விதமான பாடங்களும் கிடைக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சில சமயம் சிரிப்பைக் கொடுக்கும் வைரல் வீடியோக்கள் பல சமயம் சிந்திக்கவும் வைக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிந்திக்க மட்டுமா, அன்பையும் கற்றுக் கொடுக்கும் வீடியோக்களும், விலங்குகளின் மோதல் வீடியோக்களாலும் இணையம் நிரம்பி வழிந்தாலும் க்யூட்டான வீடியோக்கள்  மனதை மயக்குகின்றன.


இந்த வீடியோக்களின் பட்டியலில் தற்போது ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் மாட்டின் வீடியோ ஒன்று வைரலாகிறது. இதைப் பார்த்து, மாட்டின் மனிதாபிமானத்தை, இல்லையில்லை... தாயன்பை பார்த்து பலரும் நெகிழ்ந்து போகின்றனர்.



அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ், பசிக்கு உண்டா ஆட்டுப்பால் மாட்டுப்பால் என்ற வித்தியாசங்கள் என்று பலரும் இந்த வீடியோவைப் பார்த்து பதிவிட்டுள்ளனர். ஸ்வீட், க்யூட் என கேப்ஷனிட்டு பகிர்ந்து வைரலாக்கும் இந்த வீடியோ மனிதர்களுக்கும் பாடமாக மாறும்.


மேலும் படிக்க | விமானத்தில் ஏற அனுமதிக்காததால் பீதியடைந்த பெண் மயக்கம் வீடியோ வைரல்


இந்த வைரல் வீடியோவில் ஆட்டுக்குட்டியும், பசு மாட்டிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மாட்டின் ஒருபுறம் அதன் சொந்தக் குட்டியான கன்று பால் குடித்துக் கொண்டிருக்கிறது.


மறுபுறம், குட்டி ஆடு ஒன்று பசுவிடம் எக்கி எக்கி முலையை பற்றி, பால் குடிக்கிறது. கன்றுக்குட்டியை பாசத்துடன் நக்கிக் கொடுப்பது போல, ஆட்டுக்குட்டியையும் திரும்பி அதன் தலையை நக்கிக் கொடுக்க பசு முயன்றாலும் அது முடியவில்லை.


ஒரு குட்டி ஆடு பால் குடித்துக் கொண்டிருக்கும்போது, மற்றொரு ஆட்டுக் குட்டியும் வந்து பால் குடிக்கும் போட்டியில் இணைந்துக் கொள்கிறது. ஆட்டுக் குட்டிகளின் தாய்ப்பால் குடிக்கும் வீடியோ பார்ப்பவர்களை பரவசமாக்குகிறது.


பரவசமாக்கும் இந்த வீடியோ, அன்புக்கு பஞ்சமில்லை இந்த உலகத்தில் என்பதையும், மனிதாபிமானம் என்பதைவிட அன்பு ஒன்றே உலகை ஆளும் விஷயம் என்று தோன்றுகிறது.


மனிதர்கள் வைக்கும் அபிமானம், மனிதாபிமானம் என்றால், விலங்குகள் காட்டும் அன்புக்கு என்ன பெயரிடுவது? அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்? பசி என்று வந்துவிட்டால், பத்தும் பறந்துபோகும் என்ற  பழமொழியை பொய்யாக்கும் வீடியோ இந்த பசு-ஆட்டுக்குட்டி- கன்று தாய்ப்பால் வீடியோ.


மேலும் படிக்க | ஓனருக்கே டிவிஸ்ட் கொடுத்த நாய் - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR