ஓனருக்கே டிவிஸ்ட் கொடுத்த நாய் - வைரல் வீடியோ

கேம் விளையாடும்போது ஓனருக்கு நாய் கொடுத்த டிவிஸ்ட் வீடியோ காமெடியாக உள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 12, 2022, 04:54 PM IST
ஓனருக்கே டிவிஸ்ட் கொடுத்த நாய் - வைரல் வீடியோ title=

சின்ன வயதில் காமெடியாக பொழுதுபோக வேண்டும் என்பதற்காக ஓடி ஒளிந்து விளையாடும் விளையாட்டை விளையாடிருப்போம். இந்த விளையாட்டு குழந்தை பருவத்தை கடந்தவர்கள் அனைவரும் விளையாடிருப்பார்கள். குழந்தையாக இருப்பவர்கள் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். மிகவும் இயல்பாக, குழந்தை தனத்துடன் இருக்கும் அந்த விளையாட்டில் மகிழ்ச்சி அளவு கடந்ததாக இருக்கும். இந்த விளையாட்டுக்கு மட்டும் என்டே கிடையாது. எந்த வயதினரும், எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம்.

மேலும் படிக்க | 'ப்பா...' என வாய் பிளக்க வைக்கும் டான்ஸ்: இணையத்தை கலக்கும் பெண்ணின் வைரல் வீடியோ

உங்கள் முகத்தில் அளவு கடந்த மகிழ்ச்சி தாண்டவமாடும் என்பது மட்டும் உறுதி. நெருக்கமானவர்களுடன் விளையாடும்போது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி இருக்கும். ஆனால் வீடியோவில் வைரலாகியிருக்கும் ஒருவர் நாயுடன் சேர்ந்து விளையாடுகிறார். நாய் தன்னை தேடும் என நினைத்த அவருக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது. நாய் அவரை தேட வைத்துவிட்டது. இதுதான் இந்த வீடியோவின் செம ஹைலைட். பார்ப்பவர்கள் அனைவரும் வீடியோவை பார்த்து சிரித்துவிடுவார்கள். 

அந்த வீடியோவில், ஒரு துணியைக் கொண்டு தனக்கும் நாய்க்கும் இடையில் மறைத்துக் கொள்ளும் அவர், தன்னை கண்டுபிடிக்குமாறு குரல்விட்டுவிட்டு ஓடிச் செல்கிறார். அப்போது, அந்த நாய் உரிமையாளரை தேடிக் கண்டுபிடிக்காமல், அது ஓடி ஒரு அறைக்குள் ஒளிந்து கொள்கிறது. நீண்ட நேரமாக நாய் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. பின்னர், அவர் வந்து நாயை தேடிக் கண்டுபிடிக்கிறார். இந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது

மேலும் படிக்க | Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News